மிருகக் கடி (படித்து விட்டு அடிக்க வராதவை)
ஒட்டகச்சிவிங்கி : என் மனைவிக்கு கழுத்து நிறைய நகை வேணுமாம்.
*****
யானை : எப்படி எம்'மதமும்' சம்மதம் ஆகும்.
*****
குரங்கு : (ஹோட்டலில்) 'சீப்பா' ஏதாவது சாப்பிட கொண்டுவாப்பா.
*****
திமிங்கலம் : (முருகன் கோயிலில்) 'வேல்' முருகா 'வேல்' முருகா
*****
குருவி : கல்யாணம் ஆகி பல நாளாச்சி இன்னும் உன் வயத்துல 'பூச்சி புழு' உண்டாகலயா?
*****
நீர்யானை : என்னை நம்புங்க, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலே தான்.
*****
முதலை : வெங்காயம் நறுக்கும் போது எனக்கு நிஜமாகவே கண்ணீர் வந்து விடும்.
*****
கிளி1 : எங்கே உன் சின்ன பையனைக் காணும்?
கிளி2 : அவனுக்கு இறக்கை முளச்சி பறந்து போயிட்டான். |