ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... !
இந்திய பாரதபூமியில் எத்தனையோ மஹான்கள் பிறந்திருந்தாலும் அவர்கள் எல்லாவற்றிலும் அழியாப் புகழ் கொண்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் ஒருவரே. அவர் தோற்றுவித்த அத்வைதம் உலகையே ஆட்கொண்டது. சங்கரர் என்னும் அவதாரத்தினுள் சத்-சித்தானந்தம் உருவெடுத்தது..... என்று நாடே கொண்டாடுகிறது.

இத்தகைய ஆதிசங்கரர் பரம்பரையில்... காஞ்சி காமகோடி பீடத்தில் அறுபத்தியொன்பதாவது (69) சங்கராச்சரியாராக சூர்ய பிம்பமாய் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று நம்மிடையே அருள்பாவித்து வருகின்றார்கள். எளிமையே உருகொண்ட குருநாதர். கருணை பிரவாகமாக... பக்தர்களே... அவர்களின் குறைகேட்டு... ஆசீர்வதித்து பிரசாதம் அருளினால் நிச்சயம்... அவர்களுக்கு அது... நன்மை அளிக்கிறது. குருவருள் அவர் பார்வை பட்டாலே... பலஜன்மபாபம் விலகியது என.... பரவசப்படும் பக்தர்கள் ஏராளம்....!

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வத சங்கராச்சார்யராக ஸ்ரீவஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பீடத்தில் இருந்த காலத்தில் ''தனக்கு அடுத்த வாரிசு யார்...? எங்கிருக்கிறார்?'' என்று பரமாச்சார்யாளின் உள்ளத்தில் கேள்வி எழுந்த போது.....

சீர்பலவும் பெற்று சிறப்புடன் சமயஞானியர் பலரை தரணிக்கு அளித்த பெருமைக்குரிய பாரதத்தின் தென்திசை. 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற தென் திசையில் காவிரி வளம் பெற்ற தஞ்சாவூர் ஜில்லா. இங்கு மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில்... ''கோட்டூர்'' என்ற கிராமத்தில் உள்நோக்கி சென்றால் 3 கிலோமீட்டர் தூரத்தில் 'இருள்நீக்கி' என்ற கிராமம் உள்ளது. (நாமும் நம் மனதை உள்நோக்கி தியானத்தில் இருந்தால் நமமனஇருள்நீங்கி ஞானஒளி கிடைக்கும் என்பதை உணர்த்துவதுபோல) இங்கு தான் ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். திரு மஹாதேவ அய்யருக்கும், திருமதி. சரஸ்வதி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். வியாழக்கிழமை, யுவ ஆண்டு ஆடி மாதம் 3ம் தேதி 1936ம் ஆண்டு இரவு 7 மணிக்கு அவிட்ட நக்ஷ¢த்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் ஸ்வாமிகள் இப்பூவுலகை உய்விக்க கூப்பிய கரங்களோடு ஜனனம் எடுத்தார்.

ஸ்வாமிகளின் பூர்வாச்ரம பெயர் சுப்ரமண்யன் ஆகும். வேத அத்யனங்கள் முடிந்த வேதபாடங்கள் கற்றுக் கொண்ட எட்டு வயதிலேயே.. ஸ்ரீ பரமாச்சார்யாள்.. இவரை தன் வாரிசாக நியமிக்க முடிவெடுத்து.... மகா தேவய்யர் குடும்பத்திற்கு சொல்லி .... அதற்கேற்ற விதிமுறைகள் பாடங்கள், கிரந்தங்கள் எல்லாவற்றையும் கற்று கொடுக்க ஏற்பாடு செய்தார்.

1954ம் ஆண்டு விஜய ஆண்டு பங்குனி மாதம் 9ம் தேதி திங்கள் கிழமை சோமவார நன்னாளில் ஸ்ரீபரமாச்சார்யாள் சுப்ரமண்யத்திற்கு சந்நியாச தீட்ஷை கொடுத்து 'ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி' என்ற நாமம் சூட்டி தன் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.

இன்று பீடாதிபதியாக விளங்கும் ஸ்வாமிகள், அந்நாளில்.... கேதார்நாத், பத்ரிநாத், காசி, ஹரித்துவார் என்று எல்லா ஷேத்ரங்களையும், தன் திருவடி தேய கால்நடையாக சென்று அருள்பாலித்தார். இன்று பக்தர்களின் அவசரத்திற்கு இன்றைய உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க... வேனில் சென்று அருள்பாலிக்கிறார்.

இந்த குருதேவர் ஜெயந்திவிழா (பிறந்த நாள்) ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. குருநாதர் இந்த சாதுர்மாஸ்ய விரதம என்ற இரண்டு மாத காலம் சந்நியாசிகள் நதி தாண்ட மாட்டார்கள். ஒரே இடத்தில் இரண்டு மாதம் தங்கிவிடும் இந்த நாட்கள்தான் குருநாதருக்கு ஓய்வுநாட்கள் என்று எண்ண வேண்டும்.

'இந்த சாதுர்மாஸ்ய விரதம் என்றால் என்ன?' என்பதை பற்றி ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சென்னையில் ஸ்ரீமடத்தை சேர்ந்த மாத பத்திரிகையான 'அமரபாரதி' என்ற ஆன்மீக பத்திரிகையில் விளக்கம் அளித்துள்ளார் ஆசிரியராக அமரபாரதி, திரு. எம். விஸ்வநாதன் அவர்கள். ஸ்வாமிகளின் அருளுரையை.. இந்தியாவை விட்டு.. அமெரிக்கா வந்தாலும் நான் ஒரு இந்தியன் என்ற எண்ணத்தில் வேறூன்றி நிற்கும்... அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு... கொடுத்து உதவியதற்கு அமரபாரதிக்கும், திரு. விஸ்வநாதனுக்கும் நன்றி.

பி. குருபிரியா

© TamilOnline.com