மைதா மாவு முறுக்கு
தேவையான பொருட்கள்

மைதா மாவு - 400 கிராம்
உளுந்த மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்

செய்முறை :

மைதா மாவில் சிறதளவு தண்ணீர் தெளித்துப் பிட்டுக்கு மாவு பிசையும் பதத்தில் பிசைந்து இட்டிலித் தட்டில் வைத்து வேக வைத்து எடுத்து வைக்கவும்.

வேக வைத்த மாவு ஆறிய பின், பெருங்காயம், உப்பு கரைசல், வெண்ணெய், உளுந்த மாவு, சீரகம் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்கு அச்சில் மாவைப் போட்டுத் தயாராக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை விட்டு அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கைப் பிழிந்து விடவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். வெந்தவுடன் ஒரு கம்பியால் திருப்பி விடவும். முறுக்கு நன்றாக சிவந்து வந்தவுடன் எடுத்து வைக்கவும்.

நளாயினி

© TamilOnline.com