உளுந்துப் பூரணம் - காரம்
தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 8
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - பட்டாணி அளவு
கடுகு - 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் - 1/2 மூடி
நல்லெண்ணெய் - 1 டீ ஸ்பூன்

செய்முறை :

உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து ஊறவைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

ஊறிய உளுத்தம் பருப்பைத் தண்ணீரை வடித்துவிட்டு உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்துக் கரகரப்பாகத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

இட்டிலித் தட்டில் நல்லெண்ணெயைத் தடவி அரைத்த உளுந்து மாவுக் கலவையை வைத்து ஆவியில் மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும்.

வெந்த உளுத்தம் மாவை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை விட்டுக் காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலைப் போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.

உதிர்த்து வைத்துள்ள உளுந்துமாவுக் கலவை, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் கொட்டிக் கலந்து இறக்கி வைக்கவும்.

இந்த உளுந்துப்பூரணம் மிகவும் சுவையாக இருக்கும்.

நளாயினி

© TamilOnline.com