தேவையான பொருட்கள் :
முற்றிய தேங்காய் - 1 வெல்லம் - 400 கிராம் ஏலக்காய் - 4
செய்முறை :
வெல்லத்தைப் பொடியாக்கித் தேங்காய்த் துருவலுடன் கலந்து, வாணலியில் போட்டுச் சிறிது நேரம் தீய்ந்து போகாமல் வதக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தேங்காயிலிருக்கும் ஈரப்பதமே போதுமானது. இறுகி சேர்ந்தவுன் அதை எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மேல் மாவை நல்லெண்ணெய் அல்லது நெய், டால்டா எதையாவது கைகளில் சிறிது தடவிக் கொண்டு நன்றாகப் பிசைந்து பதமாக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு, அந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்பபோது மாவைப் பிசைந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மாவு காய்ந்து இறுகி விடும்.
அதன்பின், நூறு கிராம் அரிசி மாவை ஒரு தட்டில் பரப்பி வைத்துக் கொண்டு, உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொரு உருண்டையாக எடுத்துத் தட்டிலிருக்கும் மாவில் ஒத்திக் கொண்டு, அதைக் கிண்ணம் போல் (குழியாக) செய்து, அதிலே தயாரித்து வைத்திருக்கும் பூரணத்தில் நெல்லிக்காய் அளவு வைத்து எடுத்துக் கிண்ணத்தை மடித்து இரண்டு விளிம்புகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு அவற்றை இட்டிலி வேக வைப்பது போல் இட்டிலிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
இந்தக் கொழுக்கட்டையைத் தயாரிப்பதற்குச் சிரமம் இருந்தாலும் இரு ருசியான தின்பண்டமாகும். சிற்றுண்டி விடுதிகளில் காசு கொடுத்தாலும் கிடைக்காத பக்குவம் இது.
நளாயினி |