கொழுக்கட்டை
பிள்ளையாருக்கு விழா வருகிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான். பிள்ளையாரின் உருவ அமைப்பே குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் குதூகலத்தை வரவழைக்கக் கூடியது. பிள்ளையார் இந்த விஷயத்தில் எல்லோருக்கும் பொதுவானவர் தான். பிள்ளையாருக்குப் பிடித்தவையாக செய்யக்கூடிய பட்சணங்களில் முதலிடம் வகிப்பது கொழுக்கட்டை.

கொழுக்கட்டையை ஆவியில் வேக வைப்பதால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. எல்லாக் கொழுக்கட்டைகளுக்கும் மேல்மாவு தயாரித்துக் கொள்ளும் விதம் ஒரே மாதிரியானதே. ஆனால், உள்ளே வைக்கக் கூடிய பூரணத்தில் வேறுபாடு. நான்கு விதமான பூரணங்களை இம்மாத மாயாபஜார் பகுதியில் கொடுத்துள்ளோம். செய்து பிள்ளையாருக்குப் படைத்து விட்டு, நீங்களும் சாப்பிடுங்கள்.

கொழுக்கட்டைக்கு மேல்மாவு தயாரிக்கும் விதம் :

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1/2 கிலோ
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

1/2 கிலோ பச்சரிசியைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி தண்ணீரை சுத்தமாக வடிகட்டிய பின்னர், ஈர அரிசியை ஒரு துணியில் ஈரம் உலரும் வரை காய வைக்கவும். காய்ந்த அரிசியை மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீ ஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

கொதித்த தண்ணீரை அசிரி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒரு மரக்கரண்டியால் கிளறவும். நன்றாகப் பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். மாவு ரெடி. அடுத்து பூரணம் செய்யப் போகலாம்.

நளாயினி

© TamilOnline.com