கதிரவன் எழில்மன்னன்
தென்றலில் கதிரவன் எழில்மன்னன் என்று அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பிரபாகரன் சுந்தரராஜன் என்று இந்த நேர்காணலில் அறிமுகப்படுத்துகிறோம்.

தமிழில் உங்களுக்கு எப்படி ஆர்வம் பிறந்தது?

எனக்குத் தமிழில் எப்போதுமே ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கட்டுரைகள் எல்லாம் எழுதியிருக்கிறேன். ஆனால் நாடகம், கதைகள் போன்றவையெல்லாம் எழுதினதாக ஞாபகம் இல்லை. அமெரிக்கா வந்த பிறகு உற்சாகம் பிறந்தது. 1983-89 வரை OREGON இருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றும் எழுதவில்லை. கலிபோர்னியா வந்தபிறகு இங்கு உள்ளவர்களையெல்லாம் பார்த்த பிறகு ஆர்வம் பிறந்தது.

நீங்கள் படித்தது எல்லாம்......

நான் வேலூர் காட்படி டான்பாஸ்கோ பள்ளியில் படித்தேன். அங்கேயே ஹரீஸ் கல்லூரியில் பட்டம் பெற்றேன். பிறகு பெங்களூரில் என்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் & Computer Science முடித்தேன். பாஸ்டனில் MIT இல் MS முடித்தேன். பென்ஸில்வேனியா பிட்ஸ்பர்கில் இரண்டாண்டுகள் Intel OREGON இல் வேலையில் இருந்தேன். பிறகு 1989ல் கலிபோர்னியாவிற்கு வந்தேன். இப்போது Exodus கம்பெனியில் ஆறு வருஷமாக இருக்கிறேன். பன்னிரண்டாண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறேன்.

அமெரிக்காவில் தமிழார்வம் பற்றி.....

தமிழில் ''தென்றல்'' பத்திரிகையை ஆர்வத்தோடு நடத்துகிறார்கள். 'தில்லானா' போன்ற தமிழிசைப் பாடல்களை இசைக்கும் குழுக்கள், முத்தமிழ் விழாக்கள் நடத்துகிறார்கள். இவை தவிர இரண்டு மூன்று தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் நடக்கின்றன. அவற்றில் ஒன்று தமிழ்நாடு பெளண்டேஷனோடு தொடர்பு காண்டு கணேஷ்பாபு என்பவர் நடத்தும் பள்ளிக்கூடம். மற்றொன்று லாஸ் ஆல்டோஸ் என்னுமிடத்தில் சின்மயா மிஷின் நடத்தும் பள்ளிக்கூடம்.

1991-ல் சான்டா கிளாராவில் வானொலி நிலையத்தில் ஒருமணி நேரம் கேட்டு வாங்கி சனிக்கிழமை காலையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். இன்னும் பல நாடகங்கள் நடத்தியிருக்கின்றேன். 1993ல் பிட்ஸ்பர்க்கிலிருந்து வெளியில் வந்த பிறகு வேலைச்சுமை காரணமாக அவ்வளவாக நிகழ்ச்சிகளில் ஈடுபடவில்லை. 'பாமா விஜயம்' நாடகமாகப் போட்டோம். அது தவிர குழந்தைகளை வைத்து நாடகங்கள் நடத்தியிருக்கிறோம். இந்த ஊரில் அப்பா அம்மாக்களை வைத்து ஒரு நாடகம் நடத்தினோம். இதுபோல கலைத் தொடர்பான நிகழ்ச்சிகள் தவிர இலக்கியச் சங்கம் நடக்கிறது. அதில் வளைகுடா மக்கள் ஒரு குழுவாக அமைந்து நிகழ்ச்சிகள் தந்திருக்கிறோம். அதில் நானும் பங்கேற்றிருக்கிறேன்.

கலைநிகழ்ச்சிகள் என்று பார்க்கும் போது அவற்றுக்கு வருபவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே. இது பற்றி உங்கள் கருத்து?

தமிழ் மன்றத்தின் நிகழ்ச்சிகளில் மட்டும் மக்கள் குறைவாகக் கலந்து கொள்கிறார்கள். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நானும் முத்தமிழ் விழாவில் பார்த்தேன். விளம்பரம் இல்லையா? கலைஞர்கள் உற்சாகமாகக் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் இல்லையா? ஆனால் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு நிறைய உற்சாகம் இருப்பது போலத் தான் தெரிகிறது. அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். நிறைய கலை மன்றங்கள் இருப்பதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். நிறைய நிகழ்ச்சிகள், நிறைய தலைவர்கள். எனவே ஆற்றல் பங்கு போடப்பட்டு விடுகிறது. தமிழ் மன்றங்களின் நிகழ்ச்சிக்குத் தென்றல் போன்ற பத்திரிகைகள் நிறைய விளம்பரங்கள் கொடுக்கலாம். சில நேரங்களில் வானொலி நிகழ்ச்சிகளுக்கும் முதல்நாள் தான் விளம்பரம் வருகிறது. அதனால் நல்ல நிர்வாகத் திறமையோடு உணவு விடுதிகள், கோயில்கள், பொருட்கள் விற்கும் பல்வேறு கடைகள் போன்ற இடங்களில் இரண்டு மூன்று வாரங்ளுக்கு முன்னாலேயே விளம்பரங்கள் செய்யலாம். நிகழ்ச்சிகளில் இடம் பெறுமூ ஆர்வத்தைத் தூண்டும் சுவையான இடங்களை highlight செய்து விளம்பரப்படுத்தலாம்.

தமிழ் மன்றத்தில் நான் ஆயுள் சந்தாதாரர். நிகழ்ச்சி பற்றிய தனியான அறிவிப்பு வருவதில்லை. கண்ணை ஈர்க்கும் விதத்தில் Colour Flyers தயாரித்து என் போன்ற அங்கத்தினருக்கு அனுப்பி வைக்கலாம்.

உங்களுடைய தமிழார்வம் பற்றி இப்போது தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நேர்காணலின் முக்கிய நோக்கமும் கூட. உங்களது 'குழந்தைப் பாடல்கள்' பற்றி; அதில் உங்கள் முயற்சி, புத்தகம் கிடைக்குமிடம் இவை பற்றிச் சொல்லுங்கள்....

1991ல் என்னுடைய முதல் மகன்தான் இந்தப் புத்தகத்தை எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தினான் என்று சொல்ல வேண்டும். Daycare centre இல் போய் அவனுக்கு ஆங்கிலத்தில் தான் பேச வந்தது. தமிழில் எப்படி ஆர்வத்தை வரவழைப்பது என்று யோசித்தேன். அவனுக்கு ஆங்கிலத்தில் 'நர்ஸரி ரைம்ஸ்' தெரியும். அதே மெட்டில் தமிழில் பொருத்தமான வார்த்தைகளைப் போட்டு பாட்டு கற்றுக் கொடுத்தேன்.

'Twinkle Twinkle Little Star' என்ற பாடலை 'மினுக்கும் மினுக்கும் விண்மீனே' என்று கற்றுக் கொடுத்தேன்.

இதுபோல் இன்னுஞ்சில பாடல்களை எழுதினேன். தமிழ்மன்றம் சிறுவர் நிகழ்ச்சியில் ஐந்து பாடல்களைப் பாட வைத்தார்கள். தமிழ் பெளண்டேஷன் அங்கத்தினர் கண்ணப்பனிடம் இதுபற்றிப் பேசினேன். அவரும் TMP உதவியுடன் வெளியிடலாம் என்றார். இதற்கு முன்பாகவே என்னுடைய நண்பர்கள் சிலரும் இப்பாடல்களைப் புத்தக வடிவில் கொண்டு வந்தால் பெற்றோர்கள் குழந்தைகளுகூகுக் கற்றுத் தருவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தார்கள். அப்போது மணிமேகலை பிரசுரகர்த்தர் லேனா தமிழ்வாணன் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு இங்கு வந்திருந்தார். அவரும் 25 அல்லது 30 பாடல்கள் (Substantial ஆக) எழுதித் தந்தால் தானே புத்தகமாகப் போட்டுத் தருவதாகக் கூறினார். அதுவரை ஐந்தாறு பாடல்கள் மட்டுமே எழுதியிருந்த நான் முனைப்பாக உட்கார்ந்து மேலும் சில பாடல்களை எழுதி முடித்தேன். தமிழ்நாடு பெளண்ட்டேஷனில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்ட லேனா தமிழ்வாணன் தமிழை மட்டுமல்ல தமிழ்க் கலாச்சாரத்தையும் போற்றி எழுதப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.

ஓவியர் ஜெயராஜ் அவர்களை அணுகி, பாடல்களுக்குப் பொருத்தமான ஓவியங்களையும் வரையச் செய்து புத்தகத்தை அழகாக அமைத்துள்ளார். என்னுடைய புத்தகம் மொழிபெயர்ப்பு அல்ல. Transliteration அதாவது ஒவ்வொரு பாடலும் முதலில் ஆங்கில எழுத்தாக்கம், அடுத்து தமிழில் இருக்கும். மூன்றாவதாக ஆங்கில மூலப்பாடல்.

தமிழ் கற்க வைப்பதோடு தமிழ்க் கலாச்சாரமும் தெரிவிக்கச் செய்தவற்காக 'Hot cross buns' என்பதை 'சுட்ட தோசை' என்றும், 'X-mas cake' என்பதை 'பொங்கல் புட்டு' என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். 'Jack & Jill' என்பதை 'முருகனும் வள்ளியும்' என்று நம் நாட்டுப் பெயர்களை வைத்தேன்.

இப்புத்தகத்தை இலாபம் கருதி வெளியிடவில்லை. இரண்டு முக்கியமான நோக்கங்களோடு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று, 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது போல் வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரப் பயன்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்குத் தமிழ்க் கற்றுக் கொடுப்பது இதன் நோக்கம். இரண்டாவதாக, Fund raiser ஆக இப்புத்தக வருவாயைத் தமிழ்நாடு பெளண்டேஷன் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தும் donation generator ஆகக் கொள்வது. இப்புத்தகத்தை பெற கோம்ஸ் கணபதியோடு தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு பெளண்டேஷனில் உங்களுக்கு நியை ஈடுபாடு இருப்பது தெரிகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

அமெரிக்காவில் வாழும் தமிழர்களெல்லாம் சேர்ந்து ஆரம்பித்துள்ள நிறுவனம். இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களிலுள் ஏழை எளியவர்களுக்கெல்லாம் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக செயல் திட்டங்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. மற்ற விவரங்களெல்லாம் எனக்குத் தெரியாது. சென்ற ஆண்டில் தான் ஆயுள் அங்கத்தினராகச் சேர்ந்தேன். சென்னையிலுள்ள Exnora போன்ற நிறுவனங்களும் இத்துடன் இணைந்து நல்ல பல காரியங்களைச் செய்கிறார்கள்.

தமிழ்நாடு பெளண்டேஷன் உதவிகள் செய்வதற்கு மட்டுமாஅல்லது கலைத் தொடர்பானதா?

கலைத் தொடர்பானதல்ல. அதனுடைய main motivation தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே.

கதைகள், நாடகங்கள் புத்தகப் படைப்புகள் இவை தவிர வளைகுடாப்பகுதி வாழ் மக்களிடையே தமிழுக்குச் சேவை செய்யலாமென்று நினைக்கிறீர்களா? இதில் Glaring omission என்று ஏதாவது தெரிகிறதா?

Glaring omission என்று எதையுஞ் சொல்ல முடியாது. வீட்டிலே குழந்தைகளைத் தமிழில் பேச வைக்கலாம். என்னுடைய குழந்தைகளையும் சேர்த்து தான். குழந்தைகளைத் தமிழ் பேச வைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எதை எடுத்தாலும் ஆங்கிலத்தில் தான் தெரிவிக்கிறார்கள். தமிழில் சொல்லு என்று சொன்னால் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டுச் சொல்கிறார்கள். அப்படித்தான் நான் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். வாயிலிருந்து கொஞ்சமாவது தமிழ் வருகிறதே என்ற சந்தோஷம் எனக்கு. கொஞ்சம் வளர்ந்த பிறகு தமிழ் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். திறமையாகத் தமிழ் கற்றுக் கொடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிவது உண்மையிலேயே நன்மையாக இருக்கும். தமிழ்மன்றங்கள் நிறைய நிகழ்ச்சிகளை நட்ததி இந்தியாவுக்கும் நமக்கும் நல்ல கலைத்தொடர்பு இருக்குமாறு செயற்பட வேண்டும். தமிழ்ப்படங்கள், திரைப்படப் பாடல்கள் போன்றவை தவிர மற்றபடி இலக்கியத் தொடர்பான எதுவும் இடம் பெறுவதாகத் தெரியவில்லை. தமிழ் மன்றங்கள் இதுபற்றிச் சிந்திக்கலாம். பாலகுமாரன், சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் இங்கு வந்திருந்தார்கள். சுஜாதாவின் ஒரு நாடகத்தையும் நடத்தினார்கள். 'நம் டிவி' வந்திருப்பது தமிழ் கொஞ்சம் பிரபலமாக உதவுகிறது.

குழந்தைகளிடம் தமிழில் பேச வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மம்மி, டாடி என்பதை அம்மா, அப்பா என்று சொல்ல வைக்க வேண்டும். ''மாம்பழமாம் மாம்பழம்'', ''அம்மா இங்கே வா'' போன்ற குழந்தைப் பாடல்களைப் பாடக் கற்றுக் கொடுக்கலாம்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாம் கஷ்டப்பட்டு நம் குழந்தைகளைத் தமிழில் பேச வைக்கிறோம். இந்தியாவிற்குப் போனால் நம் குழந்தைகள் தமிழ் நன்றாகப் பேசப் பழகுவார்கள் என்று எதிர்பார்த்தால் அங்கேயுள்ளவர்கள் குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச வைக்கிறார்கள்.

உங்கள் படைப்பாற்றல் தமிழாற்றல் இவற்றைத் தாண்டி உங்கள் வாழ்க்கையின் இன்னொரு பகுதியைப் பார்க்கலாமா? Social obligations நிறையவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.....

புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனங்கள் எந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கின்றார்களோ அந்த நோக்கத்திற்குத் தொழில் ரீதியான என் அனுபவத்தை அடிப்படையாக்கி கொண்ட ஆரம்ப நிலையில் அவர்களுக்கு உதவுகின்ற The Indus Entrepreneu (TIE) நிறுவனத்தில் Charter member.

இதில் High power என்று சொன்னால், K.B. சந்திரசேகர், P.V. ஜகதீஷ் இவர்களை சொல்ல வேணடும். Exodus பற்றி உங்களுக்குத் தெரியும். இவர்களோடு நானும் இணைந்து குழுவாகச் செயல்படுகிறேன். இந்தக் கம்பெனி ஆரம்பித்த நாளிலிருந்து இதில் இருககிறேன். ஒரு நிறுவனம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஆரம்பித்து அதாவது ஐந்து பேருடன் ஆரம்பித்து இன்றைக்கு 5000 பேர் கொண்ட உலகளாவிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. என்னென்ன துன்பங்கள், அவற்றைத் தாண்டி வளர்ந்த பின்னும் தொடர்ந்து பல இடையூறுகள் இவற்றையெல்லாம் சந்தித்து அனுபவத்தில் அறிந்தவன். இவைத்தவிர, இப்போது TIE மூலமாக இன்னும் சில தொடக்கநிலை நிறுவனங்களுக்கு நிர்வகிக்க உதவுகிறேன்.

உங்களுடைய ஆரம்ப கால EXODUS Company involvement பற்றி சொல்ல முடியுமா?

P.V. Jaadish ம், KB Chandrasekar ம் சேர்ந்து நடத்திய Forrus Computers க்கு Internet Service கொடுப்பதற்கு சரியான கம்பெனிகள் இல்லாததால், EXODUS என்றும் நிறுவனத்தை தொடங்கிக் கொண்டிருந்தார்கள். 1995ல் P.V. ஜகதீஷ் எங்களுடைய குடும்ப நண்பர் Pittsburgh லிருந்த என்னை இந்த முயற்சியில் சேர்த்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்கள். Business மற்றும் Network துறையில் அவர்கள் இருவரும் வல்லவர்கள். Software Services துறையில் என்னுடைய உதவியை நாடினார்கள். என்னை Funding Teamல் ஒருவராக கருதலாம். ஒரு Roomல் ஐந்து அல்லது ஆறு பேர் மட்டுமே சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம் இது. தற்போது உலகம் முழுவதும் இந்நிறுவனம் இருக்கிறது. கிட்டத்தட்ட 5000 பேர்கள் பணிபுரிகின்றனர்.

தென்றலில் கலி(·போர்னியா) காலம் என்ற உங்கள் படைப்பைப் படித்தோம். தமிழ்நாட்டிலிருந்து H1 விசாவில் வந்துள்ள நிறையப் பேர் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் உங்களுடைய கணிப்பைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

1992-93 ல் நாங்கள் பார்த்த நிலைமைக்கும் இப்போதுள்ள நிலைமையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. 1989-90ல்லும் பொருளாதாரம் ஒரே வேகமாக வளர்ந்து 90-91 காலகட்டத்தில் ஒரேயடியாக சரிந்து விட்டது. பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைநீக்கம் செய்தார்கள். சிறிய கம்பெனிகள் மூடப்பட்டன. இப்போதுள்ள நிலை அதைவிட எண்ணிக்கையில் நிறுவனங்கள் பெருகிவிட்டன. காலப்போக்கில் கண்ட வளர்ச்சி இது. புதிய முயற்சிகளை மேற்கொண்ட நிறுவனங்கள் அவ்வளவுக்கவ்வளவு இப்போது பொருட்களை வாங்குவதையே நிறுத்தி விட்டார்கள். நெருப்பில் சூடு கண்டவன் அப்பெயரைக் கேட்டாலே சூடு கண்டவன் போலத்தான் இப்போதும் அந்த பயத்திலிருந்து விடுபட முடியவில்லை. சுத்தமாக இப்போது பொருட்களை வாங்குவது zero. இவர்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் எது கிடைத்தாலும் வாங்குபவர்கள் 6 மாதம் ஒரு வருடத்துக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். இப்போது எதையும் வாங்குவதில்லை. இதை ஒரு Cascading effect என்று சொல்லலாம். உதாரணத்திற்கு அவர் என்னிடம் வாங்குகிறார். நான் உங்களிடம் வாங்குகிறேன். அவர் என்னிடம் வாங்குவதை நிறுத்தி விட்டால் நான் உங்களிடம் வாங்குவதை நிறுத்தி விடுவேன். இது மாதிரி cascade ஆகி தொழில் நிறுவனங்கள் போய்க் கொண்டிருக்கிற்ன. இது I.T. நிறுவனங்களிலிருந்து உற்பத்தி நிறுவனங்கள் வரை போய்விட்டன. விரைந்து ஆழமாகப் போய்விட்டதன் பலன்தான் இது. ஆனால் நிலைமை மாறும். எப்போது என்று தான் சொல்ல முடியாது. மிகவும் ஆழமாகக் கீழே இறங்கியிருப்தால் மேலே எழும்பி வருகின்ற காலம் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு காத்திருக்க எவ்வளவு பேரால் முடியும்? சமாளித்துக் கொண்டிருக்கும் சக்தி நிறைய பேருக்கு இருக்க முடியாது. H1 விசாவில் வந்தவர்கள் இந்தியா திரும்பிப் போகும் நிலைமை வரலாம்.

நான் நினைப்பது என்னவென்றால் HIGH TECH தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாத வகையில் இன்னமும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்டுள்ள H1 விசா மக்கள் அங்கே வேலை தேடிக் கொள்ளலாம். மற்றும் உலகின் வேறு பகுதிகளிலும் வேலை தேடிச் செல்லலாம். அல்லது காலம் வரும் வரை சமாளிக்க முடியும் என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு துறையில் appliances ஏதாவது உற்பத்தி செய்யும் முயற்சியை மேற்கொண்டு நிலைமை சீர்படும் நேரம் வரும்போது கம்பெனியாக மாற்ற முயற்சிக்கலாம். விசா இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? இங்கே வேலையில்லை என்று இந்தியா போகின்றவர்களுக்கு அங்கேயும் வேலை கிடைப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். என்னுடைய கம்பெனியில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வேலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள், புதிதாக நிதி கிடைத்தவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் வேலை தேடிக் கொள்ளலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது 'VENTURE WIRE' என்ற செய்தித்தாளில் கண்டுகொள்ளலாம். புதிதாக ஆரம்பிக்கப்படாததும் நல்ல நிதி முதலீடு செய்துள்ளதுமான கம்பெனிகளில் சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம். இதுவே என்னுடைய அழுத்தமான கருத்தாகும்.

Internet -க்குப் போய் எல்லோரும் வியாபாரம் செய்கிறார்கள் இது பற்றி.....

முன்பே நிறுவப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கம்பெனிகளால் Internet மூலம் வியாபாரம் செய்ய முடியாது. புதுக் கம்பெனிகளால் தான் முடியும் என்ற எண்ணம் தோன்றியத. அதனால் மேஜை நாற்காலிகளுடன் அலுவலகம் வைக்க முடியாத நிலையில் பேனா வியாபாரம், கார் விற்கும் டீலர்ஸ் என்று பல வியாபாரங்கள் Internet இல் புதுக் கம்பெனிகளாக ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆயிரக்கணக்கான புதுக் கம்பெனிகள் தோன்றின. அவற்றின் வெற்றியை அளவிட, Random metrics உபயோகம் செய்து அத வைத்துக் கொண்டு மதிப்பீட்டை மிக அதிகமாக கணித்து பணத்தை ஏராளமாகக் கொட்டினார்கள். அதனால் நிறைய வாங்கவும் ஆரம்பித்தார்கள். விலை மேலும் மேலும் கூடிற்று. காரணம் Sun, Oracle, Cisco போன்றவர்களின் products நிறைய வாங்கினார்கள்.

மற்றொன்று டெலிகாம், affiliated Telecommunication issue. அதனால் Fibre Optic Network போன்ற துறைகளில் நிறைய வாங்கினார்கள். அது நிறைய இலாபம் ஈட்டித் தந்தது. மற்றும் ஒன்று Y2K க்காக நிறைய செலவு செய்தார்கள். செலவினம் அதிகரித்தது. போட்டி அதிகரித்தது. இரண்டாயிரத்து ஒன்றில் அப்படியே நிறுத்தி விட்டார்கள்.

அதே சமயம், Internet medium exploit செய்து சில துறைகளில் புதுக் கம்பெனியால் மட்டுமே Internet இல் பியாபாரம் செய்ய முடியும். உதாரணத்திற்கு 'Ebay" கம்பெனியைக் குறிப்பிடலாம். Webvan ஆரம்பிக்கும்போது நிறைய பேர் வாங்கினார்கள். மக்கள் விரும்புவார்கள், இது வெற்றி பெறும் என்று நம்பினார்கள். ஆனால் முடிவு அதன் volume எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இந்த முறை அதிகமாகப் பின்பற்றப்படாததால் வெற்றி பெறவில்லை. ஐரோப்பாவில் ஒரு கம்பெனி இதில் வெற்றி பெற்றது. இதில் வேறுபாடு என்னவென்றால் அவர்கள் குறிக்கோள் volume கிடையாது. அவர்கள் website வைத்திருந்தார்கள். ஆட்களை வைத்து consolidate செய்து globalise செய்து அதற்கு உண்டான செலவை வசூலித்து விடுகிறார்கள். அவர்கள் குறிக்கோள் வியாபாரத்தில் ஆழமாகப் போக வேண்டியதில்லை. 'Service & Profie' என்பதுதான் குறிக்கோள். அமெரிக்காவில் சில Groceries நிறுவனங்கள் விரிவுபடுத்தப் போகிறார்கள். எனவே இந்த Webvan அணுகுமுறை வெற்றியைத் தேடித் தரலாம். அல்லது பெரிய வீழ்ச்சியாகவும் முடியும்.

Dot Com பற்றிக் கூறினீர்கள். Exodus நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறார்கள்?

Exodus நிறுவனம் Data Centre Operation ஆரம்பித்தது. Internet Services தருகிறது. தொழில் ஆரம்பிப்பவர்கள் எல்லாம் இன்டர்நெட் மீடியமாக வைத்துத் தொழில் செய்கிறார்கள். அதற்குத் தேவையான உதவிகளையெல்லாம எங்கள் நிறுவனம் அளித்து வருகிறது. Ebay, Yahoo, MSN Hotmail போன்ற Internet applicatiions மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் customers service applications, online ordering, applications documentation systems போன்றவற்றிற்கு சிறப்புத் தகுதி பெற்றவர்கள் தேவை (experts). ஒவ்வொரு தேவைக்கும் அதற்குரிய வல்லுநர்களை வேலைக்கு வைத்துக் கொள்வது cost effective ஆக இருக்காது. எங்களைப் போன்ற நிறுவனம் அவர்களுக்கு இவை போன்ற உதவிகளைத் தருகிறது. இது cost effective ஆக இருக்கும்.

உங்களுக்குப் பொறியியல் வல்லுநராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படக் காரணமாக இருந்தது?

என்னுடைய காலத்தில் பொறியியல் வல்லுநர் என்பது ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தோன்றியது. பிறகு தான் தெரிந்தது அதற்கும் முன்பே இது ஒரு பெரிய விஷயம் என்று.

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் உப தலைவர் (Vice President); உங்களுக்குக் குடும்பம் இருக்கிறது. சமூகக் கடமைகளையும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலத் திட்டங்களையும் கொண்டிருப்பவர். தமிழ்ப் பண்பாடு பற்றிய சிந்தனைகளையும் கொண்டிருக்கிறீர்கள். இவையெல்லாவற்றிற்கும் உங்கள் நேரத்தை எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள்?

சுவையான ஒரு கேள்வி இது. என் எதிரில் இருக்கும் C.K. வெங்கட்ராமன் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே 'தென்றல்' பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார். எங்கள் Exodus தலைவர் சந்திரசேகர் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறார்! என்னைப் போல் பத்துப் பங்கு உழைக்கிறார்! நான் எனது குடும்பம், நிறுவனப் பொறுப்பு, சமுதாயம் மூன்றுக்குமே என்னுடைய நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த நேரத்தில்தான் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துக் கொள்ளவில்லை. மற்ற அலுவல்கள் நிறைய இருந்தாலும் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் சில மணி நேரங்களை ஒதுக்கித்தான் வருகிறேன். விட்டு கொடுக்கவில்லை (not compromising).

எழுத நினைத்தால், தென்றலுக்கு ஏதாவது எழுத வேண்டுமென்று நினைத்தால் அல்லது ஒரு நாடகம் எழுத நினைத்தால் சில நேரங்களில் காலையில் எழுந்து விடுவேன். இரவில் உட்கார்ந்து எழுத முடியவில்லை. வேலையிலிருந்து வரும்போது ஏற்படும் சோர்வு.

சில நேரங்களில் பயணம் போகும்போது விமானத்தில் எழுதுவேன். இந்தியாவிற்குப் போய்க் கொண்டிருந்தபோது 'அமெரிக்கத் தேர்தல்' இரண்டாம் பாகம் இங்கிருந்து சிங்கப்பூர் போகும் வழியில் ஆங்கிலத்தில் 'அம்மா' என்பதை 'amma' என்று எழுதுவது போல் டைப் செய்து முடித்துப் பின்னர், இங்கிலாந்து போவதற்குள் தமிழ் Fontல் டைப் செய்து அங்கேயே தபாலில் சேர்த்து விடுவேன். 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்'' என்பது போல் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வேன். இந்த நேரத்தில் தான் இதைச் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான வரையறை எதையும் கடைப்பிடிப்பதில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. சில நேரங்களில் Compromise செய்து கொள்ள வேண்டி வரும்போது முடியாத காரியங்களுக்கு மன்னிப்பு கோரி விடுவேன்.

நிறைய பேருடைய வாழ்க்கையில் நேரங்குறித்த குழப்பம் இருக்கிறது. இதையும் அதையும் பார்த்துக் கொண்டு மற்றவற்றிற்கும் நேரம் ஒதுக்குவது எப்படி முடியும் என்று கேட்பவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?

அறிவுரை என்று கூறுவதை விட ஒரே ஒரு கருத்தை மட்டும் நான் தெரிவிக்க முடியும். எல்லாமே எல்லா நேரத்திலும் முக்கியமென்று சொல்ல முடியாது. வெவ்வேறு காரியங்களை வெவ்வேறு நேரத்தில் தான் செய்ய வேண்டியதாக இருக்கும். சில நேரங்களில் குடும்பம் முக்கியமாகிவிடும். ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மருத்துவரிடம் போவது தான் முக்கியமாகிறது. அப்போது தமிழ்மன்ற நிகழ்ச்சி இருந்தால் போக முடியாது. காரியங்களின் முக்கியத்துவத்தை எண்ணிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

அமெரிக்காவில் இப்போதுள்ள இந்தியத் தலைமுறைக்கும் பத்தாண்டுகளுக்கு முன் வந்திருந்த இந்தியத் தலைமுறைக்கும் இடையே வேறுபாடு ஏதாவது காண முடிகிறதா? ஊக்குவிக்க வேண்டியது ஏதேனும் உண்டா?

சமுதாய ஈடுபாடு, சமூக சேவை, உதவும் மனப்பான்மை எல்லோமே ஊக்குவிக்கப்பட வேண்டியவைதாம். பத்தாண்டுகளுக்கு முன்பே இங்கு வந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் பொருள் செலவழிப்பது மூலமாக அதிகமாக சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடிகிறது. அதிக அளவு நேரத்தைத் தான் அவர்களால் ஒதுக்க முடிவதில்லை. தற்போது வந்துள்ள இளைய தலைமுறையை உற்சாகப்படுத்தினால் அவர்களால் சமுதாயத்திற்கு அதிக நேரத்தை ஒதுக்கிச் சேவை செய்ய முடியும்.

இவர்கள் பணத்தின் மூலமாக அதிகம் செய்ய முடியாத போதிலும் இரண்டு குழுவும் இணைந்து செயல்பட்டால் சமுதாயத்திற்கு நிறையவே பயன்பட முடியும். தொழிலில் இளைஞர்கள் முன்னேற அவர்கள் நிறையவே ஈடுபாடு கொண்டால் மேலும் மேலும் அதிக அளவில் உதவ முடியும்.

உதாரணமாக சந்திரசேகர், பிரபாகர் சுந்தர ராஜன் இவர்களை முன் மாதிரியாகக் குறிப்பிடலாம் என்று நினைக்கிற§ன். இப்போது உங்கள் பெயர் குறித்து ஒரு கேள்வி. பிரபாகர் சுந்தரராஜன் எப்படி கதிரவன் எழில்மன்னன் ஆனார்?!

ஏனோ என் பெயர் சரியாக இருப்பது போல் எனக்குத் தோன்றவில்லை. தமிழ்ப் பெயராக இருக்க வேண்டுமென்று யோசித்த போது பிரபாகர் என்பது கதிரவன், சுந்தரம் என்பது எழில், இராஜன் என்பது மன்னன் என்று பொருள்படும் கதிரவன் எழில்மன்னன் என்று உருவாயிற்று.

சந்திப்பு :ஸ்ரீகாந்த் ராமபத்ரன்
தொகுப்பு உதவி :Dr.அலர்மேலு ரிஷி

© TamilOnline.com