சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி தமிழ்மன்றம், கலி·போர்னியா தமிழ் கழகம் - மத்திய அமைச்சர் கண்ணப்பன்
இந்தியாவில் மரபுசாரா சக்தித் (non-conventional energy) துறையில் வளர்ச்சி காண மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. கண்ணப்பன் அவர்கள் புதிய ஆலோசனைகளைத் தேடி அமெரிக்க வந்திருந்தார். திரு. கண்ணப்பன் அவர்கள் தற்போதைய மத்திய அரசின் மரபுசாரா சக்தித் துறையின் அமைசசராக இருக்கிறார். மத்திய அமைச்சரோடு நன்கு அரசாங்க அதிகாரிகளும், பதினொன்று தனியார் நிறுவன உறுப்பினர்களும் கொண்ட குழு அமெரிக்கா வந்திருந்தது. அவர்களோடு பொதமக்கள் கலந்து விரிகுடாப் பகுதி தமிழ் மன்றமும், கலிபோர்னியா தமிழ் கழகமும் இணைந்து 'மயூரி உணவகத்தில்' மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விழாவின் துவக்கத்தில் தமிழ் மன்றத் தலைவர் திரு. சிவா சேஷப்பன் அவர்கள் தமிழ் மன்றத் தொண்டினை எடுத்துக்காட்டி அனைவரையும் வரவேற்றோர். தொடர்ந்து கலிபோர்னியா தமிழ் கழகத் தலைவி திருமதி. வெற்றிச்செல்வி இராஜமாணிக்கம் அவர்கள் தனது தமிழ்ப்பள்ளியின் விரைவான வளர்ச்சியைப் பற்றிப் பேசினார். அமைச்சர் திரு. கண்ணப்பன் அவர்கள் இந்தியாவில் தற்போது நடைபெறும் பல திட்டங்களைப் பற்றிப் பேசினார். தற்போது இந்தியாவில் மின் சக்தி தயாரிக்கும் கொள்ளளவு 100,000 மெகாவாட்ஸ். அதில் 3.7 சதவீதம் மட்டுமே புதுப்பிக்கப்படும் மின்சக்தியைச் (renewable energy) சேர்ந்தது ஆகும். 2020ஆவது வருடத்துக்குள் இந்தியாவின் மின் சக்தித் தேவை 2.5 மடங்கு அதிகமாகும் என்று கருதப்படுகின்றது. ஜனத்தொகைப் பெருக்கம், போக்குவரத்து நெரிசல் போன்றவைகளினால் மின்சாரத்தேவை அதிகரிக்கும். Fossil fuel மூலம் மின்சக்தி தயாரிப்பது நீண்ட நாட்களுக்கு இயலாது. கூடப்போனால் இன்னும் 200 வருடங்களுக்குமேல் fossil fuel-க்கு உலக அளவிலேயே தட்டுப்பாடு வந்துவிடும்.

இந்தியப் பிரதமர் திரு. வாஜ்பாயி அவர்கள் மின்சாரத்துறையில் புதிய விதிமுறைகளை வைத்துள்ளார்கள். அதில் ஒன்று புதிய முறையில் மின்சாரம் செய்வது. அதற்காகப் புது அமைச்சரவையை உருவாக்கி, அவர்களுக்கு உதவியாக ஒரு காரியாலயத்தைத் துவக்கியுள்ளார்கள். அதன் பெயர் Indian Renewable Energy Development Agency (REDA). இந்த முறையில் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தியைத் தற்போதைய 4000 மெகாவாட்டிலிருந்து 10,000 மெகாவாட் அளவிற்கு அடுத்த பத்து வருடங்களில் அதிகரிக்கச் செய்வதே இந்த அமைச்சரவையின் குறிக்கோள்.

அரசாங்கத்தின் புதிய விதிமுறைப்படி, தனியார் நிறுவனங்களுக்கும் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவ்வாறு புதிய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த அமைச்சரவை மூலம் இந்திய அரசாங்கத்தை அணுகலாம். இது நல்லதோர் வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்சாரம் அளிக்க இயலும். தற்போது 80,000க்கும் மேலான கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை. இன்னும் 50 வருடங்கள் சென்றாலும் தற்போதுள்ள மின்சார உற்பத்தி வழிமுறைகளின் மூலம் இதில் 18,000 கிராமங்களுக்குக் கூட மின்சார வசதி செய்ய இயலாது. புது அமைச்சரவையின் முயற்சிகளின் மூலம இந்திய கிராமங்கள் சூரிய ஒளி, காற்று சக்தி போன்ற மரபுசாரா சக்திகளைக் கொண்டு எல்லா கிராமங்களுக்கும் தன்னிறைவுடன் மின்சார உற்பத்தி செய்ய இயலும்.

IREDA தலைமை அதிகாரி டாக்டர். பக்தவச்சலம், பேசிய போது மரபுசாரா முறையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு வருடத்திற்குப் பத்து கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறினார். இந்த வகையில் மின்சார உற்பத்தி செய்ய முயலும் தொழில் அமைப்புகளுகூகு அரசாங்கம் நிதி உதவி செய்வதாகவும் கூறினார்.

அமெரிக்கா வந்திருக்கும் இந்தப் புத அமைச்சரவைக் குழு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகம் சென்று மரபுசாரா முறையில் குறைந்த விலையில், மின்சாரம் உற்பத்தி செய்யும் முறைகளைத் தெரிந்து கொண்டார்கள்.

இந்த விழாவிற்கு சாண்டா கிளாரா மேயர் திருமதி. பட்ரிஷியா மாகன், இந்திய தூதரகத்தலைவர் திரு. H.H.S. விஸ்வநாதன் ஆகியோரும் வந்த வாழ்த்து தெரிவித்துச் சிறப்பித்தார்கள்.

தமிழ் மக்கள் திரளாக வந்து ஆர்வத்துடன், இந்திய அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்கள்.

தமிழரசி அண்ணாமலை

© TamilOnline.com