தமிழ் இணையம் 2003 மாநாட்டு அறிவிப்பு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு ஏற்பாட்டுக் குழுவும் இணைந்து நடத்தும் ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு ''தமிழ் இணையம் 2003 - மாநாடு, கண்காட்சி'', ஆகஸ்டு மாதம் 22 முதல் 22 வரை, சென்னையில் நடக்கவிருக்கிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழ் இணையம் 2003 மாநாட்டை ஆகஸ்டு 22, நண்பகல் 12 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கில் திறந்து வைப்பார். மாநாடும் கண்காட்சியும் சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறவுள்ளன.

மாநாடு பற்றிய செய்திகளை உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் வலைத்தளத்தில் http://www.infitt.org காணலாம். மேலும் தகவல்களுக்கு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இயக்குநரை அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி:secretariat@infitt.org

அருண் மகிழ்நன், நிர்வாக இயக்குநர், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்.

© TamilOnline.com