உலக சரித்திர ஏட்டில் இந்தியாவின் ஓவிய அத்தியாயத்தை தீட்டியவர் ராஜாரவி வர்மா.
ரவிவர்மா இறந்த 1906ம் ஆண்டு, சுப்ரமண்ய பாரதி ''காலவான் போக்கில் என்றாங் கழிகிலாப் பெருமை கொண்ட கோலவான்'' என்று ஓவியரைப் பாராட்டினார்.
ரவிவர்மாவின் மறைந்த நாள் நூற்றாண்டை இந்தியாவில் திருமதி ஜெகதீஸ்வரியும் அவரது மகன் பரசுராமனும், சென்னை லலித்கலா அகாதமியில் ஜூன் 18 முதல் 24ஆம் தேதி வரை வர்மாவின் ஓவியக் கண்காட்சி மூலமாக அஞ்சலி செலுத்தினார்கள்.
கண்காட்சியை பத்மஸ்ரீ டாக்டர் சரோஜினிவரதப்பன், பத்மஸ்ரீ கவியரசு வைரமுத்து, பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமணியம் மற்றும் பத்மஸ்ரீ சுதாரகுநாதன் ஆகியோர் திறந்து வைத்து பெருமை சேர்த்தார்கள். ஓவியரது ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த திருவாங்கூர் இளவரசி கோபிகா வர்மாவும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தது சிறப்பாகும்.
ரவிவர்மாவின் சித்திரங்கள் இந்தியக் கண்காட்சிகளிலும், பணக் காரர்களின் மாளிகைகளிலும் வெளி நாட்டு கோடீஸ்வரர்கள் இல்லங்களிலும் சிறைப்பட்டிருக் கின்றன. லட்சங்கள் ஓவியரின் லட்சணத்தை காட்டா தென்பது உண்மையென்றாலும், சில வருடங்களுக்கு முன்பு வர்மாவின் ''யசோதாவும் கிருஷ்ணனும்'' என்ற ஓவியம் 56 லட்ச ரூபாய்க்கும், அவரது ''சகுந்தலையின் காதல் கடிதம்' 36 லட்ச ரூபாய்க்கும் விலைபோனது அவரது புகழ் காலத்தின் தோற்றத்தை தாங்கி நின்றிருப்பதற்கு ஒரு அத்தாட்சி.
இந்தியாவின் இதிகாசக் காட்சி களை கலையுணர்வோடும் கற்பனை யோடும் மக்களின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் ரவிவர்மா. வெளிநாட்டு ஓவிய உத்திகளையும், பரிணாமங்களையும் இந்தியாவின் ஓவியத்துக்கு அறிமுகப்படுத்தியவர் ரவிவர்மா. முதன்முறையாக ஜெர்மனி யிலிருந்து அச்சுக் கருவிகளை கொண்டு வந்ததுமட்டுமல்லாமல், தனது ஓவியங்களை சாதாரண குடிசைகளிலும் இறைவன் படங் களாக அறிமுகப்படுத்தியவர் ரவிவர்மா.
ரவிவர்மாவின் சுமார் 250 நகல் களில் 200 ஓவியங்களை இந்தக் கண்காட்சியில் வைத்திருந்தார்கள். ஓவியரது நகல்களைப் பற்றியோ, இந்தக் கண்காட்சியைப் பற்றியோ மேலும் விவரம் வேண்டுபவர்கள் டாக்டர் ஜெகதீஸ்வரியை dlparasuraman_73@rediffmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
திரு பாலன் |