ஒரு குரங்கும் இரண்டு பூனைகளும்!
THE MONKEY AND THE TWO CATS

Once there lived two cats, one white and the other black. One day the BLACKIE saw a loaf of bread on the floor. Before she could run to it, the WHITE had picked it up in its mouth.

"Give me the loaf" said BLACKIE, "I saw it first. "I won't" said WHITE, "I got it first".

ஒரு ஊரில், கறுப்பு நிறத்தில் ஒரு பூனையும், வெள்ளை நிறத்தில் ஒரு பூனையும் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் அந்தக் கறுப்புப் பூனை ஒரு ரொட்டித்துண்டைப் பார்த்தது. பாய்ந்து போய் எடுப்பதற்கு முன்னால், வெள்ளைப் பூனை அந்த ரொட்டித் துண்டை வாயில் கவ்விக் கொண்டுவிட்டது.

''அந்த ரொட்டித்துண்டை நான்தான் முதலில் பார்த்தேன். அதனால் அதை என்னிடம் கொடுத்துவிடு'' என்றது கறுப்புப்பூனை. ''ம்ஹ¥ம்... உன்னிடம் தரமாட்டேன். அதை நான் தான் முதலில் எடுத்தேன்'' என்றது வெள்ளைப்பூனை.

A wise Monkey was passing that way and the two cats said to him, "Monkey Sir, please divide this loaf equally between us. "I shall do it with pleasure. Give me the loaf" replied the Monkey.

He broke the laof into two pieces, and weighted them in a balance. Then he said to cats, "See my friends, one pieces is bigger than the other".

இரண்டு பூனைகளும் ரொட்டித்துண்டுக்காகத் தகராறு செய்துகொண்டிருக்கும்போது அந்த வழியாக ஒரு குரங்கு கடந்து சென்றது. இந்த இரண்டு பூனைகளும் அந்தக் குரங்கை நிறுத்தி ''குரங்காரே! இந்த ரொட்டித்துண்டால் எங்கள் இருவருக்குள் ஒரு சிறு பிரச்சனை எழுந்திருக்கிறது. நீங்கள் தான் இந்த ரொட்டித்துண்டை இரண்டு சம பாகங்களாகப் பிரித்துக் கொடுத்த எங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டன. ''ஓ! நிச்சயமாக மனமகிழ்ச்சியோடு இதைச் செய்து தருகிறேன். என்னிடம் அந்த ரொட்டித்துண்டைக் கொடுங்கள்'' என்றது குரங்கு.

ரொட்டித்துண்டை வாங்கிய குரங்கு அதை இரண்டு துண்டுகளாக்கி, இரண்டையும் எடை பார்த்தது. அதன் பிறகு பூனைகளைப் பார்த்து, ''இங்கே பாருங்கள் நண்பர்களே! ஒரு துண்டு இன்னொரு துண்டை விடப் பெரியதாக இருக்கிறது'' என்றது அந்தக் குரங்கு.

So saying, he took a bite of the bigger bit. This biting was repeated and both the pieces got smaller and smaller. The two cheated cats cried out : "Stop sir, give us back our pieces of bread".

இப்படிச் சொல்லிக் கொண்டே அந்தப் பெரிய துண்டில் ஒரு பகுதியைக் குரங்கு தானே கடித்துத் தின்றுவிட்டது. மீண்டும் இரண்டு துண்டுகளையும் எடைபார்த்து திரும்பவும் இதே போல் சொல்லி அடுத்த கையிலுள்ள ரொட்டித்துண்டின் ஒரு பகுதியைக் கடித்துத் தின்றுவிட்டது. மீண்டும் மீண்டும் இப்படியே சொல்லிச் சொல்லி அந்த ரொடடித்துண்டில் பாதியை அந்தக் குரங்கே சாப்பிட்டு விட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பூனைகளும் அழத்தொடங்கி விட்டன. ''குரங்காரே! நிறுத்துங்கள். எங்களது ரொட்டித்துண்டை எங்களிடமே திருப்பி கொடுத்துவிடுங்கள்'' என்றன.

But the cunning Monkey replied, "well! these bit are my fee for doing this job". So saying he swallowed the two bits and sent the foolish cast empty away.

ஆனால், அந்தத் தந்திரக்காரக் குரங்கு என்ன சொன்னது தெரியுமா? ''உங்கள் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இவ்வளவு நேரம் நான் செய்த வேலைக்கு இதுதான் என் சம்பளம்'' என்று சொல்லிக் கொண்டே கையில் மீதமிருந்த அந்த இரண்டு ரொட்டித்துண்டுகளையும் அப்படியே தன் வாயில் போட்டுச் சாப்பிட்டு விட்டது. ஒரு ரொட்டித்துண்டுக்காகச் சண்டைபோட்டுக் கொண்ட இரண்டு பூனைகளும் மிகுந்த ஏமாற்றத்துடன் அவ்விடத்தை விட்டு வெளியேறின.

© TamilOnline.com