ஜூலை 2003: குறுக்கெழுத்துப்புதிர்
சென்ற முறை

'அக்கிரகாரம் எப்படி அழிவது?
ஆனபயிர் எப்படிக் கெடுவது?'


என்ற விடுகதையைக் கேட்டிருந்தோம். அதற்கு விடை :

'பார்ப்பாரில்லாமல்'

அதுபோல் நானும் முயன்று உருவாக்கிய விடுகதை இதோ :

'ஊரெல்லாம் தாத்தா ஓடுவதேன்?
உருளைச் செடியைப் பிடுங்குவதேன்?'


சுறுசுறுப்பாக உடல் பருமனைக் குறைக்க முயலும் முதியோர்கள் கோபிக்க மாட்டார்களென்றால் இதோ அதன் விடை :

கிழங்குண்டானதால்

(கிழம் + குண்டானதால் = கிழங்கு + உண்டானதால்)

குறுக்காக

3. சட்டத்தில் ரவா இட்டு தீ வைத்த வன்முறையாளர் (5)
6. மாற்றியமை, மாணவர் எதிர்காலத்தையா? (4)
7. பனித்திரையில் செல், நிலைகுலைந்து போ (4)
8. சித்திரைப் பெளர்ணமியில் நீராடுபவர் (6)
13. எல்லையற்ற முதல் டி.வி. நிர்மலா கடைசியாக மாற்றினாள் (6)
14. பளபளக்கும் துணியை ரகசியத் தலைவி சுற்றிக்கொள்ள எண்ணெய் காணாத தலை (4)
15. பிழைபட தகவல் புறா புல்லறுத்துத் தரும் (4)
16. ஒரு ஸ்வரத்துடன் பந்து, கடைசி வரை சிபாரிசு (5)

நெடுக்காக

1. நக்க அலை புரளும் ஆற்றோரம் (5)
2. உரலை விட இரண்டு பங்கு துன்பத்துடன் மேடையேறும் (5)
4. ஆனாலும் இவர் மகாபாரதத்தை எழுதவில்லை (4)
5. பிறப்பிலிருந்து இறப்பு வரை நீடிப்பது (4)
9. புளுகர்களின் செல்ல விலங்கு (3)
10. கான்சியரசனுக்குச் சிறப்பல்ல வன்முறைக்கு அடங்கியிருப்பது (5)
11. புலவர்கள் எழுதுவது உமது கல்லடிகளுக்கு (5)
12. நாகரீகமில்லாமல் உடுத்துவதற்கு இரவு தொடங்காமல் வெளியே செத்தொழி (4)
13. கூடையைப் பின்னி இரட்டை வாலைச் சுற்றி முன்னே போ (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:3. தீவிரவாதி 6. திருத்து 7. சறுக்கு 8. கள்ளழகர் 13. முடிவில்லாத 14.பரட்டை 15. தவறாக 16. பரிந்துரை

நெடுக்காக:1. நதிக்கரை 2. மத்தளம் 4. வியாசர் 5. வாழ்க்கை 9. கரடி 10. பல்லவன் 11. பாதங்கள் 12. மரவுரி 13. முடைந்து

© TamilOnline.com