தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1/2 கிண்ணம் கார்ன் மீல் (cornmeal) 1/2 கிண்ணம் சர்க்கரை - 1/4 கிண்ணம் பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி முட்டை - 1 (நன்றாக அடித்தது) உருக்கிய வெண்ணெய் - 2 தேக்கரண்டி பால் - 1/2 கிண்ணம்
செய்முறை
375 டிகிரி ·பாரன்ஹீட்டில் ஓவனை முன்னதாகவே சூடுபடுத்திக் கொள்ளுங்கள். கார்ன்மீல், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை மற்றும் உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். உருக்கிய வெண்ணெயுடனும், பாலுடனும் நன்றாக அடித்த முட்டையைக் கலந்து கொள்ளுங்கள்.
இந்தக் கலவையை, ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் மாவுக்கலவையோடு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். ம·பின் செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தின் (pan) உட்புறத்தில் நன்றாக நெய் தடவிக் கொள்ளுங்கள். கலந்து வைத்திருக்கும் கலவையை ஒவ்வொரு ம·பின் கப்பிலும் நிரம்ப ஊற்றி, இதை பேக் செய்யவும். ஒரு டூத்பிக்கினால், ம·பினின் நடுவே குத்தினால், அப்படியே அதோடு சேர்ந்து ம·பின் முழுமையாக வெளியே வரும் பதம் வரைக்கும் பேக் செய்யுங்கள்.
சரஸ்வதி தியாகராஜன் |