கார்ன் வடை
தேவையான பொருட்கள் :

சோள முத்துகள் - 2 கிண்ணம்
கடலை மாவு - 1/4 கிண்ணம்
அரிசி மாவு - 1/4 கிண்ணம்
துருவிய தேங்காய் - 1/8 கிண்ணம்
வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி - 1 தேக்கரண்டி சீவியது
வெள்ளைப்பூண்டு - 1 தேக்கரண்டி சீவியது
சீரகப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - ஒரு கை நிறைய
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

மிக்ஸியில் போட்டு நன்றாக சோளத்தை அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் கலந்து, குறைந்த அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். (வடை பதத்திற்கு இருக்கும்படி)

எண்ணெய் தடவிய இலையில் வடையாகத் தட்டிக் கொள்ளவும். அடுப்பில் எண்ணெய் சட்டி வைத்து எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் இந்த வடையை, (இரண்டு பக்கங்களும்) பொன்நிறமாகப் பொறித்தெடுங்கள்.

பொறித்தெடுத்த வடையில் இருக்கும் தேவைக்கு அதிகமாக எண்ணெயை நீக்கிவிட்டு சூடாகப் பரிமாறுங்கள். சுவையாக இருக்கும். காரம் விரும்புபவர்கள் பச்சை மிளகாயை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com