கார்ன் ஸ்பெஷல் [CORN SPECIAL]
கார்ன் சூப்

தேவையான பொருட்கள்:

சோளம் - 2 கிண்ணம்
வெங்காயம் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 1
தோல் நீக்கிய வெள்ளைப்பூண்டு - 3
இஞ்சி - 1 '' துண்டு
இலவங்கம் - 2
இலவங்கப்ட்டை - ஒரு சின்ன துண்டு
வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
Half and Half (க்ரீம் பாதி பால் பாதி) - 3/4 கிண்ணம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடினமான பாத்திரத்தில் 2 மேஜைக் கரண்டி வெண்ணெயை விட்டு, அதில் மேலே சொன்ன பொருட்களில் தண்ணீரையும், half and half ஐயும் தவிர பிற பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு இலேசாக வதக்கவும்.

வதக்கிய பிறகு, ஒரு கிண்ணம் தண்ணீரை மட்டும் ஊற்றி ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவிடுங்கள். அதன் பிறகு, இதை நன்றாக ஆறவிட்டு (குளிர்ந்த நிலைக்கு வந்ததும்) இதைப் பெரிய மிக்ஸி ஜாருக்கு மாற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பெரிய கண்ணுள்ள வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டி வைத்திருக்கும் இந்தக் கலவையை மீண்டும் அடிகனமான பாத்திரத்தில் மாற்றி அதை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து, அதனுடன் இரண்டு கப் தண்ணீரைக் கலந்து கொள்ளவும்.

இது கொதிக்கத் தொடங்கும்போது இத்துடன் half and half ஐ கலந்து கொள்ளுங்கள். இதை நீர்க்கச் செய்வதற்காகக் கொஞ்சம் தண்ணீர் அல்லது பாலை உங்களுக்குத் தேவையான பதம் வரும் அளவுக்குக் கலந்து கொள்ளுங்கள்.

நன்கு கழுவி சுத்தம் செய்த கொத்தமல்லி தழைகளை அதன் மேல் தூவி விடுங்கள். கடைசியாக ருசிக்கு ஏற்ப மிளகுப் பொடி தூவி பரிமாறுங்கள்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com