இந்திய ராகங்களில் 'பருவங்களின் ராகங்கள்'
சின்சின்னாட்டி சிகாமோர் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் அந்த மே மாத ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த 'The Sound of Seasons' பல வகைகளில் தனித்தன்மை படைத்தது. ஒரு முன்னணி சேம்பர் கருவியிசைக் குழு (Cincinnati Chamber Orchestra) இந்திய ராகங்களின் அடிப்படையில் அமைந்த இசையை வாசித்தது அதில் ஒன்று. இந்தியச் சிறார் சேர்ந்திசைக் குழு (children's choir) ஒன்று உள்ளூர் சேர்ந்திசைக் குழுவான தி சின்சின்னாட்டி க்வாயிர் (60 குழந்தைகள்) மேலும் 64 பேருடன் சேர்ந்து தி கிரேடர் சின்சின்னாட்டி இண்டியன் சில்ட்ரன்ஸ் க்வாயிர் என்ற அமைப்பாகப் பாடியது மற்றொரு சிறப்பு. நிகழ்ச்சியைக் காண வந்திருந்த 900 பேரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியதில் வியப்பில்லைதான்.

அன்றைய சிறப்பு விருந்தினராக ஓஹியோ மாநிலச் செயலாளர் ஜென்னி·பர் ப்ரன்னர் கலந்துகொண்டார். தலைமை விருந்தினர் டான் மர்·பி (CEO, National Underground Railroad Freedom Center).

கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் அண்மைக் கால மகாமுயற்சி என்று இதைச் சொல்லலாம். 'சாந்தி-ஓர் அமைதிப் பயணம்' போன்ற புகழ்பெற்ற சேர்ந்திசை நிகழ்ச்சிகளை வழங்கி முன்னரே பிரபலமடைந்தவர்தான் கன்னிக்ஸ். இதற்கான பட்டறைகள் நடத்துவதற்கு ஓஹியோ ஆர்ட்ஸ் கவுன்ஸில், சின் சினாட்டிஸ் காலேஜ் கன்சர்வேடரி ஆ·ப் மியூசிக், வேர்ல்ட் மியூசிக் சீரிஸ் ஆகியவை உதவி செய்தன.

மேலும் விபரங்களுக்கு: www.kanniks.com

ராஜ் மங்கலிக் (ஆங்கிலத்தில்)

© TamilOnline.com