க்ரியா ராமகிருஷ்ணன் என்று அழைக்கப் படும் எஸ்.ராமகிருஷ்ணன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சேவையில் ஈடுபட்டு வந்தவர். கசடதபற என்னும் தீவிர இலக்கிய பத்திரிகையை தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர். க்ரியா பிரசுரா லயத்தை நிறுவி அதன்மூலம் நூற்றுக் கணக்கான தரமான தமிழ் நூல்களைப் பிரசுரித்தவர். மொழி என்னும் லாப நோக்கற்ற அமைப்பின் செயலாளராகவும், 'சமகால தமிழில் மரபுச் சொற்களும், சொற்றொடர்களும்' என்ற தமிழ்- தமிழ் - ஆங்கில அகராதியின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர்.
எஸ். ராமருஷ்ணன் நிர்வாக ஆசிரியராக கடமையாற்றி பதிப்பித்த 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' 2005ம் ஆண்டின் சிறந்த நூலாக 'அபுனைவு' இலக்கியப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பரிசாக 500 கனடிய டாலர்கள் வழங்கப் படுகிறது. தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக இந்த விருதுகளை வழங்கியவர் பேராசிரியர் டேவிட் கிளான்·பீல்ட்.
நன்றி: அ. முத்துலிங்கம் |