'மாலைநேரத்து மயக்கம்' என்ற படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இதன் நாயகன் கார்த்தி; நாயகி, ரீமாசென். படப்பிடிப்பு நடந்து வரும் நேரத்தில் திடீரென்று படத்தின் பெயர் 'ஆயிரம் ஒருவன்' என்று மாற்றப்பட்டது.
இதற்கிடையில் இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக ஹந்தியில் படம் ஒன்றை இயக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார்.
தமிழில் வெற்றிகரமாக ஓடிய '7ஜி ரெயின்போ காலனி' படமே தற்போது ஹிந்தியில் தயராகவிருக்கிறது. ஹிந்தியிலும் செல்வராகவனே இயக்கவிருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் விவேக் ஒபராய் நடிக்க விருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த விவேக் ஒபராய் இப்படம் சம்பந்தமாக செல்வராகவனைச் சந்தித்து பேசியதாகத் தெரிகிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் |