அது பிரம்ம கமலம் அல்ல
தென்றல் ஆகஸ்டு, 2007 இதழில் 'இரவில் மலர்ந்த தாமரை' என்ற பெயரில் வெளியாகியிருந்த செய்தியைப் பற்றி வாசகர் லாரன்ஸ் ரிச்சர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறார்:

'உங்கள் பத்திரிகையில் வெளியாகி உள்ளது பிரம்ம கமலத்தின் படம் அல்ல. அது ஆர்க்கிட்-கள்ளி வகையைச் சேர்ந்த எபி·பில்லம் ஆக்ஸிபெடாலம் (Epiphyllum oxypetallum) தாவரத்தின் மலராகும். இரவில் மலர்ந்து இரண்டு மணி நேரமே இருக்கும் பூ இது. இந்திய அரசாங்கமும் இதே பூவைத் தவறாக பிரம்ம கமலம் என்று சொல்லி ஒரு தபால்தலையை வெளியிட்டுள்ளது.

உண்மையான பிரம்ம கமலம் (படத்தில் காண்க) ஹிமாலயத்தின் மலர்ப் பள்ளத்தாக்கில் (Valley of Flowers) காணப்படுகிறது. அதன் தாவரவியல் பெயர் Saussurea obvallatta. கடல்மட்டத்துக்கு 3000 மீட்டருக்கு மேல் இருக்கும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த மலர் சூரியகாந்தி வகையைச் சேர்ந்தது.'

-

© TamilOnline.com