கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு குறைந்தது 10 தமிழ்ச் சொற்களையாவது அமைக்க முயற்சிப்போமா?
உதாரணம்: காகம்
நளினி சம்பத்குமார்
விடைகளை பார்க்க
காலம், பாலம், பாசம், பாயசம், காயம், சாயம், சமயம், பாகம், பானகம், யாகம்.
சற்றே கடினமான சொற்களைப் பார்க்கலாமா?
'கமலம்' என்றால் தாமரைப் பூ.
'சலனம்' என்றால் அசைவு.
'சயனம்' என்றால் அமளி. இரண்டு சொற்களுமே தெரியவில்லையா?
வீட்டில் உள்ள பெரியவர்களைக் கேளுங்கள். அமளி என்ற சொல்லுக்கு சயனம் என்பதைத் தவிர இன்னொரு பொருளும் உண்டு.
வீட்டில் தமிழ் அகராதி வைத்திருக்கிறீர்களா? எடுத்துப் பாருங்கள்.
இல்லையென்றால், கீழே உள்ள சுட்டியில் போய் ஆங்கிலத்திலோ, யூனிகோடிலோ தேடலாம்:
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/