பூசணிக்காய் அல்வா என்னும் காசி அல்வா
தேவையான பொருட்கள்

பூசணிக்காய் அல்வா செய்வதற்கு கனமான பூசணிக்காய் தேர்வு செய்யவும். லேசான பூசணி அல்வாவுக்கு உகந்தது அல்ல.

பூசணித் துண்டுகள் - 1 1/2 கிண்ணம்
சர்க்கரை - 3 கிண்ணம்
நெய் - 1 1/2 கிண்ணம்
கேசரித் தூள் - சிறிதளவு
ஏலக்காய் - 6
முந்திரிப் பருப்பு - 8
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
குங்குமப் பூ - சிறிதளவு

செய்முறை

பூசணிக்காயைத் துருவி, துணியில் கட்டிப் பிழிந்த பின் நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

சர்க்கரைப் பாகு வைத்து அது முற்றி வரும்போது வதக்கிய பூசணிக்காயை அதில் போட்டுக் கிளறவும். இடையிடையே நெய் விட்டபடி கிளறவும்.

பின்பு கேசரித் தூள், ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

மிகவும் சுவையான அல்வா. துண்டுகளை மிக்சியில் அரைத்து, ஒட்ட தண்ணீரைப் பிழிந்து விட்டும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com