சிவன் என்னும் ஆடலரசன்
2004 ஆகஸ்டு 28 மற்றும் 29, தேதிகளில் 'ஆடலரசன்' (Lord of Dance) என்ற கருத்தில் சிவபரமானைப் பற்றிய நடன நிகழ்ச்சியொன்றை கலா வந்தனா நடனக் குழுமம் (சான் ஹோசே) நடத்த இருக்கிறார்கள். கலா வந்தனாவின் கலை இயக்குநர் சுந்தரா ஸ்வாமிநாதனின் நடன அமைப்பில் சுமார் 40 ஆடற்கலைஞர்கள் இதில் பங்கு பெறுவர்.

ஓர் அரிய வங்காளமொழிப் பாடலுக்கு அமைந்த சிவனின் படைப்புத் தாண்டவம், அடுத்து சம்ஹார தாண்டவன் அதன்பின் தில்லையிலே சக்தியோடு ஆனந்தக் கூத்தாடும் நடராசனின் திருநடனம் ஆகியவை இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். மிகுந்த ஆய்வுக்குப் பின் சுந்தரா ஸ்வாமிநாதன் நடனத்துக்கு நாயகியாகிய நடராசப் பெருமானின் அருள் நடனத்தை வடிவமைத்துள்ளார்.

1989-இல் துவங்கி கலா வந்தனாவின் சென்ற ஆண்டு நிகழ்ச்சியான 'கோவில் நடனங்களின் கதை' ரசிகர்களிடம் ஊடகங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் புகழ்செறிந்த விமர்சனங்களை தூண்டும் சூழலை மாணவர்களுக்கு இவ்வமைப்பு அளித்துப் பேணுகிறது.

நிகழ்ச்சி : 'ஆடலரசன்'
நாள் : சனிக்கிழமை, ஆக, 28, பி.ப. 4.30 மணி
ஞாயிற்றுக்கிழமை, ஆக, 29, பி.ப. 4.30 மணி
இடம் : Jackson Theater, Smith Center, Ohlone College, 43600 Mission Blvd. Fremont, CA 94539
நுழைவு : நன்கொடையாளர் - $50; பொது - $25, $15
இணையத்தில் சீட்டு வாங்க :http://kalavandana.smartpick.com
தகவலுக்கு : 408.238.8321
மின்னஞ்சல் :lordofdance@smartpick.com

© TamilOnline.com