கெளரவ வேடத்தில் பாக்யராஜ்
'ஒளி' படத்தைத் தயாரிக்கிறது விண் இண்டர்நேஷனல். இப்படத்தில் முரளி கதாநாயகன், பூனம் கதாநாயகி. ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் கே. பாக்யராஜ்.

பாக்யராஜ் கெளரவ வேடத்தில் நடித்த 'விதி', 'நான் சிகப்பு மனிதன்' போன்ற படங்கள் அப்போது பெரிய வெற்றியடைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார்.

பாக்யராஜ் நடித்த காட்சிகள் சமீபத்தில் வாகினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டன. இப்படத்தில் விஜயகுமார், ரகுவரன், ரமேஷ்கன்னா, பாண்டு என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு ஆர். செல்வா, கலை ஆண்டனி பீட்டர், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் ஆகிய அனைத்தையும் கவனிக்கிறார் டி. ஒளிச்சந்திரன். இவர் கே. பாக்யராஜின் உதவியாளராவார்.

தொகுப்பு :கேடிஸ்ரீ

© TamilOnline.com