தென்னிந்தியத் திரைப்பட விழா சீனாவில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.
சீன அரசின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு இந்தத் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் 6 தமிழ், 6 தெலுங்கு, 4 மலையாளம் மற்றும் 4 கன்னடப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழில் ஆட்டோகிராப், பேரழகன், கில்லி, விருமாண்டி, தூள், திருடா திருடி ஆகிய படங்கள் சீனாவுக்குப் போக இருக்கின்றன.
வணிக ரீதியாக தென்னிந்திய படங்களுக்கு சீனாவில் ஆதரவு கிடைக்க தென்னிந்தியத் திரைப்பட விழாவை அங்கு நடத்த வேண்டும் எனத் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சம்மேளனம் நடுவண் அரசைக் கோரியது. இதன் விளைவே இந்த விழா.
இதன்மூலம் ஒரு புதிய, பிரம்மாண்டமான சந்தை வசப்படுமா?
தொகுப்பு :கேடிஸ்ரீ |