ஆகஸ்டு 2004: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

3. புலவர் இடைச் செருக சாதனம் (3)
5. பச்சையாய் மின்னும் பத்தாவது தாரகை தர வேறுபாடு (5)
6. இளமை, ஆட்டம் முடிந்ததும் விழுவது (2)
7. அயோத்தி சிம்மாசனவாசி செய்யும் திரும்பவும் சிறைப் பிடிப்பு (3)
8. பால் வேண்டாக் கன்று (5)
11. புரட்டுவேலைக்காரர்கள் வைத்திருப்பது நெல் நடுவே சற்றே குறைந்த கோபுரம் (5)
12. கப்பல் தலைவர் வீரர் குழாம் சேர சூதாட்டம் (3)
14. நெல்லிலிருந்து நீக்கப்பட வேண்டியதைத் துப்பு, முழுதாக வேண்டாம்! (2)
16. சுருக்கத்தை விளக்குவது உதாரணமாக 5ல் இருப்பது (5)
17. உயிரை வாங்குபவன் தலைவனாக இருக்க முடியாதோ? (3)

நெடுக்காக

1. பிரேதத்தில் வைத்த மசிக்கும் சாதனம் எல்லாம் ஒன்றே (6)
2. செல்ல அம்மு இடை தொடர இன்பம் (3)
3. காலடியில் இருப்பது மந்திரத்தால் பறக்கலாம் (5)
4. நொந்து கொள்ளும்படி சட்டம் (2)
9. கம்ப்யூனிஸ்டு பட்டினத்தார் கையிலேந்த ஏற்றது (6)
10. நடுவில் இருவரின்றி தசரதக்போன் கூடப் பிறந்தவன் (5)
13. உயர்ந்த சுவர் நிலவு இறுதியாகக் குறைதல் (3)
15. அளவு மீறாக் கருமி காட்டியதில் அடக்கம் (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:3. கருவி 5. மரகதம் 6. திரை 7. பாதுகை 8. இளஞ்செடி 11. நெம்புகோல் 12. பகடை 14. உமி 16. ரத்தினம் 17. காலன்

நெடுக்காக:1. சமத்துவம் 2. போகம் 3. கம்பளம் 4. விதி 9. செங்கரும்பு 10. சகோதரன் 13. மதில் 15. மிகா

© TamilOnline.com