அம்மணிக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கிண்ணம்
தேங்காய் - 1 கிண்ணம்
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

அரிசிமாவை அளந்து அதே அளவு தண்ணீர் விட்டு நல்லெண்ணெய் உப்பு சேர்த்து, அடுப்பில் கொதி வரும் போது கொட்டிக் கிளறிக் கொண்டு தேங்காய்த் துருவல், மிளகாய்ப் பொடி போட்டு சேர்த்துப் பிசைந்து கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சீடை அளவிற்கு உருண்டைகளாய் உருட்டிக் கொள்ளவும். இதை இட்லி தட்டில் கொட்டி ஆவியில் வேக விடவும்.

வெந்தவுடன் எடுத்து வாணலியில் எண்ணெய் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து உருண்டைகளைப் போட்டு வதக்கவும்.

ஒன்றோடொன்று ஒட்டாமல் வதங்கியவுடன் எடுத்து வைத்துச் சாப்பிடலாம்.

இதையே சன்யாசிக் கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள். கொழுக்கட்டை மாவு மீந்து விட்டால் இது மாதிரி செய்வதுண்டு.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com