தேவையான பொருட்கள்
கீரை - 1 கட்டு வெங்காயம் - 1 மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கடலை மாவு - 1 மேசைகரண்டி அரிசி மாவு - 2 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிப்பதற்கு
செய்முறை
அரிசிமாவைக் கொழுக்கட்டைக்குக் கிளறுவது போலக் கிளறி மூடி வைக்கவும். கீரையை அலம்பிப் பொடியாக நறுக்கிக் கொண்டு, வெங்காயமும் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, கீரையையும் போட்டு உப்பு மிளகாய்ப்பொடி சேர்த்துக் கிளறி, கடலை மாவையும் போட்டுக் கெட்டிப் பூரணம் செய்து சொள்ளவும்.
அரிசிமாவை எடுத்துச் சிறு கிண்ணம் போல் செய்து உள்ளே கீரைப் பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
இப்போது கீரைக் கொழுக்கட்டை தயார்.
இதே போல் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி, காய்கறிகள் வதக்கிப் பூரணம் செய்தும் இதுபோல் வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.
தங்கம் ராமசாமி |