தேவையானப் பொருட்கள்
ரவை - 1 பெரிய கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம் வெல்லம் - 1 கிண்ணம் ஏலக்காய் - 5 எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையானது உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ரவையை உப்புப் போட்டுக் கெட்டியாய் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஊற விடவும். ஊறிய ரவையை உரலில் போட்டு எண்ணெய் தொட்டு இடிப்பது உண்டு. இல்லாவிடில் கையால் நன்றாக அஏத்திப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். பூரணம் பிசுக்கென்று சுருண்டு வரும் போது ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கவும்.
ரவையை ஒரு பெரிய கோலிகுண்டு அளவு எடுத்து அரிசி மாவில் தோய்த்துக் குட்டி அப்பம் போல் இட்டு நடுவில் தேங்காய்ப் பூரணம் வைத்து ஓரங்களில் துளி தண்ணீரை நனைத்த வெள்ளைத் துணியால் தடவி பூரணம் வெளியில் வராதபடி கொழுக்கட்டை போல் மூடவும்.
பிறகு வாணலியில் அடுப்பில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கொழுக்கட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாய்ப் பொரித்து எடுக்கவும். இதுவே ரவை கொழுக்கட்டை என்பது.
மைதாமாவு பாதி, போதுமை மாவு பாதி போட்டும் மேல் மாவு வைத்துச் செய்யலாம். இது கொஞ்ச நாள் வைத்துச் சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி |