எள்ளுக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்

எள் - 1 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய் - 3
அரிசிமாவு - 2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

கருப்பு எள்ளானால் ஊற வைத்துக் களைந்து தேய்த்து வெய்யிலில் வைத்துத் தோல் போகப் புடைத்து வறுக்க வேண்டும்.

வெள்ளை எள்ளானால் அப்படியே வெறும் வாணலியில் போட்டு அடுப்பை நிதானமாய் எரியவிட்டுப் பொரித்து எடுத்து வெல்லத்துடன் சேர்த்துப் பொடி செய்து ஏலப்பொடி போட்டுபூ பூரணம் செய்யவும்.

முன் சொன்னது போலவே அரிசி மாவைக் கிளறி எடுத்துச் சிறு சொப்பு செய்து பூரணம் வைத்து நீளவாட்டில் சோமாசி போல் எண்ணெய் தொட்டு மூடி ஆவியில் வைத்து எடுக்கவும். பூரணத்தில் சிறிது தேங்காய்த் துருவல் போட்டும் செய்யலாம்.


தங்கம் ராமசாமி

© TamilOnline.com