தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் வெல்லம் - 1 1/2 கிண்ணம் ஏலக்காய் - 5 அரிரி மாவு - 2 கிண்ணம் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
கடலைப்பருப்பை சிவக்க வறுத்து வேகவிடவும்.
வெந்தவுடன் வடியவிட்டுத் தேங்காய்த் துருவல், வெல்லம் இவற்றுடன் ஏலக்காயும் போட்டு மிக்சியில் அரைத்து எண்ணெய் அல்லது 1 ஸ்பூன் நெய் விட்டு வாணலியில் கெட்டியாய்க் கிளறிக் கொண்டு முன் சொன்னது போல் அரிசிமாவு கிளறி எடுத்துச் சிறு கிண்ணம் போல் செய்து உள்ளே கடலைப் பருப்பு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இதே போன்று துவரம் பருப்பிலும் செய்யலாம். இது மிகவும் சுவையான கொழுக்கட்டை.
தங்கம் ராமசாமி |