ஜூலை 2001: வாசகர் கடிதம்
ஒவ்வொரு முறையும் பிரமிக்கத் தக்க முறையில் சிறுகதைகளில் உணர்ச்சிகளையும் திருப்பங்களையும், நெற்றியில் சம்மட்டியால் அடிப்பது போல் போடுகிறார்! திருமதி கீதா பென்னெட்டுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், எங்களுக்கு இவ்வளவு சிறந்த தமிழ் பத்திரிகையை அளிப்பதற்கும் நன்றி. மேலும் நிறையக் கதைகளும் கட்டுரைகளும் பிரசுரிக்கவும்.

ரூபா துரை,
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா

*****


அகிலா கிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதை மிகச் சிறப்பாக இருந்தது. நகைச் சுவை இழையோட நல்லதோர் கருத்தை அவர் வலியுறுத்திய விதம் அற்புதம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அம்மாவின் கைப்பக்குவத்தையும் தாயகத்தின் அன் பான உறவுகளையும் ஈடுசெய்ய எந்த சக்தியாலும் இயலாது என்பதை நன்கு உணர்த்தியிருந்தார். பசுமையான பழைய நினைவுகளைத் தாலாட்ட வைத்த அவருக்கு எனது நன்றி.

கிருத்திகா நாதன்

*****


தென்றல் இதழும் அதற்கான இணைய தளமும் மிகச் சிறப்பு. எனது பெற்றோர் தென்றலை மிகவும் விரும்பிப் படிக்கின்றனர். இதழைப் பதிப்பிக்க தாங்கள் எடுத்து வரும் முயற்சிக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உமா கணபதி,
நியூயார்க், கலிபோர்னியா

*****


'மாயாபஜார்' பகுதியைப் படிக்கத் தவறுவதே யில்லை. எனது கணவர் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை அனைத்துப் பக்கங்களையும் ஆர்வமாகப் படிப்பார். தென்றலின் சுகத்தை நாங்கள் இருவரும் அனுபவித்து வருகிறோம்,நன்றி.

ராதா தனபாலன்,
சாண்டா கிளாரா, கலிபோர்னியா

*****


எனது அன்னை தென்றல் இதழை மிகவும் விரும்பிப் படித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் தென்றல் இதழை எடுத்து வருமாறு எனக்கு நினைவுபடுத்த அவர் தவறுவதேயில்லை.

சேகர் ஸ்ரீனிவாசன்,
அல்மாடென், கலிபோர்னியா

*****


ஜூன் மாத தென்றல் இதழ் வெகு சிறப்பாக அமைந்திருந்தது. நீதிக் கதைகள், குழந்தைப் பராமரிப்பு போன்றவை அடங்கிய சிறுவர் பகுதியை வெளியிடலாமே!

ஸ்ரீகாந்த் ராமபத்ரன்,
·பிரிமாண்ட், கலிபோர்னியா

*****


தென்றல் இதழை தபாலில் அனுப்புவதற்குப் பதிலாக ஈ.·பேக்ஸ் செய்யலாமே!

நாகரத்தினம்,
மவுண்டெய்ன் வியூ, கலிபே

*****


தென்றல் இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்கள் அற்புதமான பணி தொடர வாழ்த்துகள்.

மூர்த்தி,
கலிபோர்னியா 95051

*****


தென்றலில் நான் விரும்பிப் படிக்கும் பகுதி அரசியல் கட்சிச் சார்போ, விருப்புவெறுப்போ இன்றி நடுநிலைமையில் நேர்மையும் கண்ணியமும் நிறைந்த கருத்துக்களை வெளியிடும் 'UNBIASED STATE MENTS' உன்மையிலேயே ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை . ஆசிரியர் பக்கம் கட்டுரையில் ஆழ்ந்து சிந்தித்துத் தெரிவித்துள்ள ஸ்படிக வரிகள் 'அரசியல் பகுதி' குறித்து எழுதியுள்ளது என்னைக் கவர்ந்த பகுதி.

அலர்மேலு ரிஷி, ட்ராய், மிச்சிகன்

*****


முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை அனைத்துப் பக்கங்களையும் படித்து முடித்த போது தென்றலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையுமே மிக சுவாரஸ்யமானவை என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் படித்து ரசித்த சிறந்த தமிழ் இதழ்களில் தென்றலும் ஒன்று என்பதை உறுதியாகச் சொல்கிறேன். சினிமாவுக்கு சற்று அதிக அளவிலான பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனினும் எனது இந்தக் கருத்தைப் பொருட்படுத்த வேண்டாம்.

தென்றலின் உயர்தரம், இனிய தமிழ்நடை எனை வெகுவாய்க் கவர்கிறது. பாராட்டுகள்.அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கில வார்த்தைகள் தலை காட்டினாலும் மற்ற இதழ்களோடு ஒப்பிடுகையில் தென்றல் மேம்பட்டதாக விளங்குகின்றது. தனிக் கவனம் எடுத்து தவிர்த்திருப்பதற்கு நன்றி.

பேராசிரியர் பி.பி.வைத்தியநாதன்,
கால்டெக், பாசடேனா, கலிபோர்னியா.

*****


வணக்கம். கலிபோர்னியாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலமாகத் தென்றல் இதழைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதழ் மிக சுவாரஸ்யமாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து தமிழ் இதழினை வெளியிடும் தங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

சுரேஷ் பாபு,
டோப்பெகா, கன்சாஸ்¡ர்னியா

*****


தமிழ் தென்றலுக்கு எனது பணிவான வணக்கம் கலி·போர்னியாவில் ஆரம்பித்த தென்றல் சிகாகோவிலும் தவழ ஆரம்பித்து விட்டது, தரமான தமிழ் 'தென்றல்' பாராட்டுக்குரிய நல்ல முயற்சி.

டாக்டர் அனு மணி,
சிகாகோ

© TamilOnline.com