ஜூலை 2001: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)

வாஞ்சிநாதன்
vanchi@chennaionline.com

குறுக்காக

1. பாதி ஆக்கிய முன்னே உமிழா ஆயுதம் (5)
4. ஏற்றுக்கொள்ளும்படியான பதக்கம் விளிம்புகள் தேய்ந்தது (3)
6. தங்கத்திலும் அரியது புருஷன் தலை தன்னுடன் சேர்ந்தது (3)
7. வீக்கத்துடன் தலை போகும் பயம் வருபவரை அறிவிக்கும் (5)
8. திரும்பும் பூமிக்குள் பாதி மலரும் வைக்க ஆசைப்படு (4)
9. பயிரின் தாகம்போக்க சற்று தலையிட்டுப் பருகப்படுவது (4)
12. கோபாலன் பாதி ஜாங்கிரி தர அவன் இறுதியில் ஒட்டுவான் (5)
14. வெயிலைத் தரும் சுரத்துடன் கணவன் (3)
16. அழுத்தந் திருத்தமான பேச்சில் கட்டிக் கொள்ள ஒன்றும் துடைத்துக் கொள்ள மற்றொன்றும் பெறலாமோ?(3)
17. சிரம் பாதி தாழ்த்தி உள்வர கலைப் படைப்பு (5)

நெடுக்காக

1. வம்போடு சேரும் மாட்டைக் கட்டும் (3)
2. சிறுவன் மானம் விலங்கின்றி இனிக்கும் அமுதம் (5)
3. முதலில் கிடைத்த தினுசு சாதகமாய்க் கட்டத்தில் அடைபடும் (4)
4. உறங்குவோரை மறைப்பு எழுப்புவர் (3)
5. தம்மைச் சுற்றி கபம் பலவிதங்கள் கலந்தது (5)
8. கலைந்த துகிலவிய அகன்றது (5)
10. பாதி பாயசம் சேர்த்த சாப்பாட்டு வரிசையில் உறவினர் (5)
11. கனி உனக்கு கூந்தலழகிருக்க முள் ஏனோ? (4)
13. குளிர்ந்த மொட்டு முனை தாவரத்திலிருக்கும் (3)
15. எதிர்கால நடப்பைச் சொல்வது முழுமையாகாது உறுதி (3)

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:1. துப்பாக்கி 4. தக்க 6. புதன் 7. கட்டியம் 8. விரும்பு 9. பாசனம் 12. கிரிதரன் 14. பரிதி 16. துண்டு 17. சித்திரம்
நெடுக்காக:1. தும்பு 2. பாலன்னம் 3. கிரகம் 4. தட்டி 5. கதம்பம் 8. விலகியது 10. சம்பந்தி 11. அன்னாசி 13. தண்டு 15. திடம்

© TamilOnline.com