நவரத்ன குருமா
தேவையான பொருள்கள்

பன்னீர் - 100 கிராம்
உருளைக்கிழங்கு, - நறுக்கியது
காரட், பீன்ஸ்,
பட்டாணி - 2 கோப்பை
காலிபிளவர் - 2
தக்காளி - 3
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 1/2 தேக்கரண்டி
பால் - 150 கிராம்
கிரீம் - 2 மேசைக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பன்னீர் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் துருவி வைக்கவும். தக்காளிகளை வெந்நீரில் போட்டு எடுத்துத் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகளை வேக வைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுப் பன்னீர்த்துண்டுகளைப் பொரித்தெடுத்துத் தனியே வைக்கவும். நெய் யைக் காய வைத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதி னைச் சேர்க்கவும். வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் மசித்த தக்காளிகளையும், மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு எல்லாவற்றையும் சேர்க் கவும். நல்ல குழம்பு பதத்திற்கு வந்தவுடன் பால், கிரீம் சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்துப் பன்னீர்த் துண்டுகளைச் சேர்க்கவும். வறுத்த முந்திரி மற்றும் கொத்தமல்லித் தழைகளைத் தூவிப் பரிமாறவும்.

நளாயினி

© TamilOnline.com