அப்பளம் சாதம்
தேவையான பொருட்கள்

அரிசி - 1கோப்பை
தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பச்சை மிளகாய் - 3
உலர்ந்த மிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பொரித்த அப்பளம் - 10
நெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசியை நன்கு கழுவி உதிரி உதிரியாக எதுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொரித்த அப்பளத்தை தூளாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, உலர்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறி வேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வடித்து வைத்திருக்கும் சாதம், உப்பையும் அதில் போட்டுக் கிளறவும்

பொரித்த அப்பளத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தயாரான அப்பளம் சாதத்தை சூடாகப் பரிமாறவும்.

நளாயினி

© TamilOnline.com