வெஜிடபிள் சால்னா
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1
காரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
பட்டாணி - 1 கோப்பை
தேங்காய் - 1 மூடி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கசகசா - 1 தேக்கரண்டி
பட்டை - 1துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
டால்டா - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 10

செய்முறை

எல்லாக் காய்கறிகளையும் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்துத் தண்ணீர் விட்டுக் கொதித்தவுடன் பபோட்டு முதலில் வேக வைத்துக் கொள்ளவும். பட்டாணி வெந்தவுடன் அதைத் தனியாக எடுத்துக் கொண்டு, மற்ற காய்கறிகளைப் போட்டு சிறிது உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டு கசகசா, முந்திரிப் பருப்பு எல்லாவற்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் டால்டாவை விட்டுக் காய்ந்தவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் போட்டுப் பொரிந்தவுடன் வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் வதக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதைப் போட்டுக் கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி, சிறிதளவு மிளகாய்ப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகாய்ப்பொடி வாசனை போகக் கொதித்தவுடன் வெந்த காய்கறிகள் மற்றும் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து, தேங்காய்ப் பாலை விட்டுக் கொதித்தவுடன் இறக்கி விடவும். அதிகம் காரம் இல்லாமல் தேங்காய்ப் பால் சுவையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

புலவுக்கு மிகவும் ஏற்ற பக்கவாத்தியம் இது.

நளாயினி

© TamilOnline.com