காய்கறி வறுவல்
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 4
கேரட் - 2
குடைமிளகாய் - 2
காலிப்பிளவர் - பாதி பூ
பச்சை பட்டாணி - 1கோப்பை
சமையல் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 2
கொத்தமல்லித் தழை - 2 மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கோப்பை

செய்முறை

உருளைக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டையும் சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். காலிப்பிளவரை பெரிய துண்டுகளாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள் ளவும். குடை மிளகாயை பெரியதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சில நிமிடம் வரை வதக்கவும்.

மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்க்கவும்.

நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், குடைமிளகாய், பச்சை பட்டாணி போட்டு வதக்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பில் தீயை சிறிதாக்கிக் கொள்ளவும். வாணலியின் மேற்புறத்தை தட்டால் மூடி ஐந்து நிமிடம் வரை அடுப்பில் விடவும்.

கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். கடைசியாக காய்கறிகள் வெந்தவுடன் தண்ணீர் வற்றி தெரியும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி விடவும்.

இந்த பக்குவத்தை சாதம் மற்றும் சப்பாத்தி, நான் போன்ற டிபன் வகைகளுடன் பரிமாறலாம்.

சரஸ்வதி தியாகராஜன்,
அட்லாண்டா.

© TamilOnline.com