தமிழக அரசியலில் - Next...
தி.மு.க
சாதிக்கும் கூட்டணி குறைந்தபட்ச சாதனையைக் கூட நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. தேர்தல் முடிவுகளினால் ரொம்பவும் அப்செட் ஆகியிருப்பவர்கள் தி.மு.க-வின் பெரிய தலைகள் மட்டுமே. மற்றபடி தொண்டர்கள் என்னவோ சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். மதிப்பிற்குரிய எதிர்கட்சியாகக் செயல்படுவதினால், மட்டுமே மக்களின் கருணையை அடுத்த தேர்தலிலாவது பெற முடியும். வாரிசு அரசியல் விசயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நலம்.

அ.தி.மு.க
நிரூபிக்க வேண்டிய தருணமிது. ஆடம்பரங் களைத் தவிர்த்து எளிமையைக் கற்றுக் கொண்டு விட்டார் ஜெயலலிதா. இதை அவரது சமீபத்திய நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுக்கின்றன. கூட்டணிக் கட்சிகளைத் தொடர்ந்து மதிப்பதன் மூலமாகவே பிரச்சனை யில்லாமல் அடி எடுத்து வைக்க முடியும்.

ம.தி.மு.க
புலி பாய நினைத்துப் படு பாதாளத்தில் குப்புறப் பாய்ந்துள்ளது. வை.கோவின் ஆக் ரோஷமான முழக்கங்களுக்குப் பயனில்லாமல் போய்விட்டது. 'ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்' என்ற நடவடிக்கையை இனியாவது கைவிட வேண்டுமென்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகள் அறிக்கைப் போர்களைத் தொடர்ந்து நடத்து வதன் மூலமாகவே இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பா.ம.க
இந்தத் தேர்தலின் மூலம் சாதிக் கட்சி என்னும் முகத்திரையைக் கிழிக்க முயற்சித்திருக்கிறது. வாரிசு அரசியல் விவகாரத்தில் பா.ம.கவும் கவனமுடன் செயல்பட வேண்டும். வன்னிய வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த ஜெயலலிதா விடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்த ஐந்தாண்டுகளும் நிலையான அணியி லிருந்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும்.

த.மா.கா
தொடர்ந்து வரும் அதிர்ஷ்டத்தைப் பேணிக் காக்க வேண்டும். மூப்பனார் கு(சொ)தப்பிக் கொண்டிருப்பதைக் கைவிட வேண்டும். அது கட்சிக்கும் உடல் நலத்திற்கும் கேடு.

காங்கிரஸ்
டீ பார்ட்டிகளுக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. அம்மாவின் அருளாசியுடன் பாண்டிச்சேரி உபயமாக வழங்கப்பட்டதை கோஷ்டிப் பூசலின்றி காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

புதிய தமிழகம்
கிருண்சாமிக்குப் பலத்த அடி. தலித் வாக்கு வங்கியின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். கடைசி வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதைக் கற்றுத் தந்திருக்கிறது.

புதிய நீதிக்கட்சி
ஏ.சி. சண்முகம் 'ஏசியில்' இருக்கத்தான் லாயக்கு என மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள்.

மக்கள் தமிழ்த் தேசம்
கண்ணப்பன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விடுவது நலம். அடுத்த தேர்தல் தொகுதிப் பங்கீடுகளின் போது, பெரிய கட்சிகள் இவரை அலுவலகத்திற்குள் நுழையவாவது விடுமா என்பதே கேள்விக்குறிதான்.

விடுதலைச் சிறுத்தைகள்
திருமாவளவனுக்கு குறிப்பிட்ட விகித முன்னேற்றம். தலித் மக்களின் அண்ணனாக இருப்பவர். அண்ணன் ஸ்தானத்திலிருந்து தலைவர் ஸ்தானத்துக்கு நகராமல் இருப்பதன் மூலமே தொடர்ந்து அந்த மக்களின் ஆதர வைப் பெற முடியும். பாதிக்கப்பட்ட இடங்க ளுக்கு இவர் அடிக்கும் 'ஸ்பாட் விசிட்'கள் இவருடைய மிகப் பெரிய பலம்

கம்யூனிஸ்ட் கட்சிகள்
இந்தத் தேர்தலில் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும். அடுத்த தேர்தலிலாவது இரண்டு இலக்கங்களில் தொகுதிகளைப் பெறுமளவிற்கு தமிழகத்தில் வளர்ச்சி பெற வேண்டும். கரை படியாத கரங்கள் என்கிற இமேஜைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

த.மா.கா ஜனநாயகப் பேரவை
முதன்முறையாக இந்தத் தேர்தலின் மூலம் ப.சிதம்பரம் மக்கள் பக்கமாக நகர்ந்திருக் கிறார். அறிவு ஜீவிகள் மட்டுமல்லாது மக்களும் சிதம்பரத்தைப் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள். தொடர்ந்து மக்களைச் சந்தித்து வருவதன் மூலம் ப.சிதம்பரம் அடுத்த தேர்தலில் நிலை யான இடத்தை பெற முடியும்.

சரவணன்

© TamilOnline.com