சிரிங்க...
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பிரயாணம் சென்ற அமெரிக்கரை, ஆஸ்திரேலிய கைடு ஒருவர் மிருகக்காட்சி சாலைக்கு கூட்டிச்-சென்றார். அமெரிக்கரோ வழியில் கண்ட மிருகங்களைப் பார்த்து ரொம்பத் தாழ்வாக வும், அமெரிக்காவில்தான் எல்லாம் பெரியது எனச்சொல்லியும் ஆஸ்திரேலியரை ரொம்பவும் எரிச்சலூட்டி வந்தார்.

தொடர்ந்து, உலாவி வந்த அழகிய யானைக்கூட்டத்தைப் பார்த்த அமெரிக்கர் "இது எங்க ஊரு மானை விட ரொம்ப சிறியது" என்றார். பின்னர் கண்ட புலிக் கூட்டத்தினைப் பார்த்து "இது அமெரிக்க நரியை விடச்சின்னது" என்று சொல்லவே ஆஸ்திரே லியர் போனால் போகட்டும் என்று பொறுமை யோடிருந்தார்.

அப்போது அருகே தாவிச்சென்ற ஒரு கங்காருவினைப் பார்த்து பிரமித்த அமெரிக்கர் "இது என்ன மிருகம் எனக்கேட்க", தக்க சமயத்திற்காகக் காத்திருந்த ஆஸ்திரேலியரோ "இது எங்க ஊரு கொசுங்க" என்று ஒரு போடு போட்டார்.

சற்றே விழித்த அமெரிக்கரின் முகத்தில் ஈயாடவில்லை.

ஸ்ரீகோண்டு,
ப்ரீமாண்ட், கலிபோர்னியா.

*****


நான் எப்ப ·ப்ளைட்ல (flight) ஏறினாலும் எனக்கு அதே சீட்டுதான், பிடிச்ச சீட்டுல உக்காரமுடியில, டிரிங்சு குடிக்க முடியில, உள்ள (Inflight) காட்டுற படம் பார்க்க முடியல, ஜன்னல சாத்திட்டு கூட நல்லா தூங்க முடியல, என்னாம்மாயிது அநியாயம்" என்று, ஏரோப் ளேனில் ஏறும்போது complain தோரணையில் வம்பு செய்த ஒருவரிடம், air-hostess "பேசாம உங்க வேலயைப் போய் பாருங்க" எனச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

Complain செய்தவர் யாராக இருக்கும் ?

வேற யாரு. நம்ம Pilot தான்.

© TamilOnline.com