தமிழக சட்டமன்றத் தேர்தல் - ஒரு பார்வை
தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக நீண்ட வரலாறு கொண்டது. தற்போதைய சட்டப் பேரவையின் அமைப்பு இல்லாதிருந்த காலத்தில் இருந்தபோதே சட்டப் பேரவைக்கான முதல் தேர்தல் 1910 இல் நடைபெற்றது. இது 1909 இந்திய அரசு சட்டத்தின்படி அமைந்திருந்தது.

தொடர்ந்து 1913, 1916 மற்றும் 1919 ஆம் ஆண்டுகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கீழ் முதல் தேர்தல் 30.11.1920, 1.12.1920, 2.12.1920 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதன் பின்பு 1923, 1926, 1930 ஆம் ஆண்டுகளிலும் தேர்தல்கள் நடைபெற்றன.

இதனை அடுத்து மீண்டும் 1935 இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் 1937, 1946 ஆம் ஆண்டுகளிலும் தேர்தல்கள் நடைபெற்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிற்பாடு முதல் சட்டப் பேரவைத் தேர்தல் 1952 இல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முறையே 1957, 1962, 1967, 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996 என்று பதினொரு முறை தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

தற்போது 2001 ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் தயாராகி வரகின்றனர். தேர்தலைச் சந்திக்கும் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் விரைவுபடுத்தப்படுகின்றன.

1952 தேர்தலில் மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. இது 1957 தேர்தலின் போது 205 என்று குறைந்தது. அதையடுத்து 1962 இல் நடைபெற்ற தேர்தலில் இருந்துதான் சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது இருப்பதைப் போன்று 234 என்று திருத்தியமைக்கப்பட்டது.

2001 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கடந்த தேர்தல்களின் சில தகவல்கள்.

வாக்காளர்களும் வாக்களித்தோரும்

தேர்தல் வாக்காளர்கள் வாக்களித்தோர் வாக்காளர்
ஆண்டு சதவிகிதம்
1952 2,69,80,956 * 2,09,06,259* 77.49*
1957 1,75,14,993 1,14,93,955 65.62
1962 1,86,75,436 1,31,94,649 70.65
1967 2,07,97,325 1,59,28,693 76.59
1971 2,30,64,985 1,65,69,760 71.83
1977 2,81,73,342 1,73,43,472 61.56
1980 2,91,99,969 1,91,01,113 65.41
1984 3,09,57,439 2,27,32,298 73.57
1989 3,54,19,324 2,45,95,071 69.44vv
1991 3,99,17,777 2,54,78,486 63.83
1996 4,24,86,212 2,64,12,069 62.17

* ஆந்திரம் கேரளப் பகுதிகள் உள்ளிட்ட ஒன்றுபட்ட சென்னை மாகாணம்.

தேர்தல் புள்ளிவிவரம்


1996 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு பார்வை


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்



* மாநில வாரியாகக் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதால் 1962 மற்றும் 1967-இல் தேசியக் கட்சிகள் என்று எதுவுமில்லை.
** தமிழக மாநிலக் கட்சிகள்


மாவட்ட வாரியாகச் சட்டப்பேரவை உறுப்பினர்கள்

இராமநாதபுரம் 5
ஈரோடு 10
கடலூர் 9
கரூர் 6
கன்னியாகுமரி 7
காஞ்சிபுரம் 9
கோயமுத்தூர் 15
சிவகங்கை 5
சென்னை 14+1 (நியமனம்)
சேலம் 11
தஞ்சாவூர் 9
தருமபுரி 10
திண்டுக்கல் 7
திருச்சிராப்பள்ளி 6
திருநெல்வேலி 11
திருவண்ணாமலை 9
திருவள்ளூர் 9
திருவாரூர் 5
தூத்துக்குடி 7
தேனி 5
நாகபட்டினம் 6
நாமக்கல் 6
நீலகிரி 3
புதுக்கோட்டை 5
பெரம்பலூர் 4
மதுரை 10
விருதுநகர் 6
விழுப்புரம் 12
வேலூர் 12


பெண் வேட்பாளர்கள்



* ஆந்திர, கேரளப் பகுதிகளடங்கிய சென்னை மாகாணம்
** இரு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஜெயலலிதா காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியை ராஜினாமா செய்தார்.

சட்டப்பேரவைத் தொகுதிகள்



* ஆந்திரம் மற்றும் கேரள மாநிலப் பகுதிகள் உள்ளடங்கிய ஒன்றுபட்ட சென்னை மாகாணம்
* ஆந்திர கேரளப் பகுதிகள் அடங்கிய ஒன்றுபட்ட சென்னை மாகாணம்.

அடேங்கப்பா... எத்தனை கட்சி!!!

தமிழ்நாட்டில் மட்டும் 68 கட்சிகள் இருக்கின்றன. இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 6, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் 5, மற்ற 57 கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாகும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள்:-
  • பகுஜன் சமாஜ் கட்சி
  • பாரதீய ஜனதா கட்சி
  • மார்க்சிஸ்ட் கட்சி
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சி
  • இந்திய தேசிய காங்கிரஸ்
  • தேசியவாத காங்கிரஸ்


அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்:-
  • தி.மு.க
  • அ.இ.அ.தி.மு.க
  • த.மா.கா
  • ம.தி.மு.க
  • பா.ம.க


பதிவு செய்யப்பட்ட கட்சிகள்:-
  • அகில இந்திய பார்வர்டு பிளாக் (சுபாஷிஸ்டு)
  • அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம்
  • அம்பேத்கார் மக்கள் இயக்கம்
  • அம்பேத்கார் புரட்சிகர மக்கள் கட்சி
  • அனைத்திந்திய எம்.ஜி.ஆர். கட்சி
  • அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்
  • பாரத மக்கள் காங்கிரஸ்
  • பாரதீய டெமாக்ரடிக் தளம்
  • கிறிஸ்தவ மக்கள் கட்சி
  • கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி
  • கிறிஸ்தவ முன்னேற்ற கழகம்
  • கொங்குநாடு மக்கள் கட்சி
  • ஜனநாயக பார்வர்டு பிளாக்
  • தேசிய பாதுகாப்பு கழகம்
  • திராவிட தெலுகர் முன்னேற்ற கழகம்
  • திராவிட மக்கள் காங்கிரஸ்
  • திராவிட விழிப்புணர்ச்சி கழகம்
  • விவசாய முன்னேற்ற கழகம்
  • கிராம முன்னேற்ற கழகம்
  • ஐக்கிய மக்கள் முன்னேற்ற கழகம்
  • இந்திய கிறிஸ்துவ முன்னணி
  • ஜகத் தெலுகு முன்னேற்ற கழகம்
  • கைவினைஞர் முன்னேற்ற கழகம்
  • காமராஜர் ஆதித்தனார் கழகம்
  • காமராஜர் தேசிய காங்கிரஸ்
  • காஞ்சி அறிஞர் அண்ணா திராவிட மக்கள் கழகம்
  • இந்திய தொழிலாளர் மற்றும் வேலை பாதுகாப்பு கட்சி
  • எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.
  • எம்.ஜி.ஆர். கழகம்
  • எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகம்
  • மகாபாரத் மகாஜன் சபா
  • மக்கள் நல உரிமை கழகம்
  • மக்கள் சக்தி இயக்கம்
  • மக்கள் தமிழ் தேசம்
  • மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
  • மறுமலர்ச்சி தமிழகம்
  • மார்க்சிஸ்ட் ஏஞ்சலிஸ்ட் லெனினிஸ்ட் பாட்டாளி மக்கள் நலஇயக்கம்
  • இந்திய குடியரசு கட்சி (சிவராங்)
  • சமூக நீதிக்கட்சி
  • தமிழ் தேசிய கட்சி
  • தமிழ்நாடு தேசிய கிராமிய தொழிலாளர் காங்கிரஸ்
  • தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்
  • தமிழ்நாடு உழவர் மற்றும் தொழிலாளர் கட்சி
  • தமிழ்நாடு மக்கள் கட்சி
  • தமிழர் தேசிய இயக்கம்
  • தமிழர் கழகம்
  • தமிழக முன்னேற்ற முன்னணி
  • தமிழக ராஜீவ் காங்கிரஸ்
  • தமிழர் கட்சி
  • தாயக மக்கள் கட்சி
  • தமிழர் பூமி
  • தராசு மக்கள் கட்சி
  • மலைவாழ் மக்கள் கட்சி
  • இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு
  • உழைப்பாளர் கட்சி
  • உழைப்பாளர் பொது நல கட்சி
  • விவசாயி அன்பு கட்சி

© TamilOnline.com