வருங்காலத்தில் ஜோதிகா- சிம்ரன் ஆகியோர் மட்டுமல்லாது மும்தாஜுக்கும் போட்டியாக மாறக்கூடிய தன்மைகளோடு ஒரு புதுமுகம். ஐந்தரை அடி உயரத்தில் சுமார் 50 கிலோ எடையுடைய சாக்லேட்....
சொந்தப் பெயர் அவந்திகா. படத்துக்காக ஜெயாரே என பெயர் மாற்றியிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்குத்தான் முதன் முதலாகத் தரிசனம் தருகிறார். 99' ஆம் ஆண்டில் மிஸ் கோவாவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இவ்வளவு காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தது வாய்ப்பு கிடைக்காததால் அல்ல. நம்பித்தான் ஆக வேண்டும். முதல் காரணம் இவ்வளவு அழகான பெண்ணைச் சந்தேகிப்பது ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம். இரண்டாவது காரணம், இவரைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருப்பவர் டெலிபோன் மணிபோல் சிரிக்கும் மனீஷா கொய்ராலா.
அவருடைய இனிய மழலையை இங்கே முடிந்தவரை தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.
''மனீஷா கொய்ராலா ஆன்டி கிட்டே மாதேஷ் சார் ஒரு புதுமுகம் வேணும்னு கேட்டு வைத்திருந்தார். அவங்களும் சின்சியரா ஜாக்கிஷெராப் கிட்டே சொல்லியிருக்காங்க. ஜாக்கிஷெராப் அங்கிள்... நிஜமாவே எனக்குச் சொந்த அங்கிள் அவர். அவர்தான் என்கிட்டே பேசினார்....''
மும்பை புதுமுகம் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகிற விஷயத்துக்குப் பின் சங்கிலித் தொடர் போல இவ்வளவு சங்கதி இருக்கிறதா?
சாக்லேட்டை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள்:- டைரக்ஷன்: ஏ. வெங்கடேஷ் இசை: தேவா
நடிகர்கள்: பிரசாந்த், ஜெயாரே, மும்தாஜ் (இரட்டைவேடம்), சுஹாசினி மணிரத்னம், நாகேந்திர பிரசாத், 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, தாமு, இயக்குநர் ராஜசேகர், சார்லி, சாப்ளின் பாலு, அஜய்
பார்வையாளன் |