மே 17 - உலகத் தொலை தகவல் தொடர்பு நாள்
இணையம் வருவதற்குக் காரணமாகயிருந்தவர்களுள் ஒருவரான வின்டன் செர்·ப் எனும் அறிவியல் அறிஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துணிவுடன் ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். பூமிக் கோளத்தின் எல்லைக்கு அப்பாலும், விண்வெளிக்கு அப்பாலும் கணினி இணைப்பு வந்து விடுமென்று இவர் கருதினார். அதற்கு கோள இணையம் என்று பெயரிட்டார்.
இணையம் பற்றிய விவாதங்களையும் வருங் காலம் பற்றிச் சொல்லப்படுபவைகளையும் கவனிக்கும் போது அவர் கூறுவது இயலக் கூடியதே என எண்ணத் தோன்றுகிறது. ஏழை/பணக்கார நாடுகள் என்று பிரிப்பதையும் ஒரே நாடுகளுக்குள் குழுக்களாகப் பிரிப்பதையும் கணினி அறிவியலாளர்களுக்குள் பிரிவினைகள் உண்டாவதையும் சிறிது காலத்துக்கு இருந்து வரும் நிலைமை என்றே கூற வேண்டும். உண்மையில் இணையத்தின் முன்னேற்றத்தை யாராலும் தடுத்துவிட முடியாது.
ஓர் ஆளுக்கு நூறு கணினிகள் வீதம் 2020-ஆம் ஆண்டில் இணையத்தில் இலட்சம் கோடி கணினிகள் செயல்படும் என்று சொன்னால் நியாயமாகத்தான் தோன்றுகிறது என்கிறார் கிறிஸ்டியன் ஹ¤ட்டிமா என்னும் அறிவியலாளர். இந்த அளவுகூட குறைத்துச் சொல்லப் படுவதாகச் சிலர் சொல்கிறார்கள்.
சென்ற ஆண்டு வளர்ச்சியை வைத்துத் தொழில் நுட்பம் அவ்வாறு முன்னேறும் என்னும் கருத்து உண்டாகிறது. 1999-ல் ஐக்கிய நாடுகள் திட்டத்து அறிக்கை உலக மக்கள் தொகையில் 15 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் சென்ற ஆண்டு வளர்ச்சியை வைத்துத் தொழில் நுட்பம் அவ்வாறு முன்னேறும் என்னும் கருத்து உண்டாகிறது. 1999-ல் ஐக்கிய நாடுகள் திட்டத்து அறிக்கை உலக மக்கள் தொகையில் 15 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் இணையத்தின் 88 விழுக்காட்டைப் பயன் படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. பன்முக டாட்.காம் நிறுவனங்கள் நிதி இன்றித் தோல்வியுற்றன. தொழில்நுட்பம் மெதுவாகத் தான் வளர்கிறது என்னும் கருத்து மாபெரும் முன்னேற்றம் விளையுமா என்று ஐயம் கொள்ளச் செய்கிறது. இணையத்தைக் கைவிடும் மனப்பான்மை வளர்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இணையத்தைப் பயன்படுத்தும் ஆயிரம் பேர்களையும், பயன்படுத்தாத ஆயிரம் பேர்களையும் பேட்டி கண்டதில் இணைய வளர்ச்சி வேகம் குறைந்து வருவதாகத் தெரிகிறது என்று கூறுகிறது அமெரிக்காவிலுள்ள இணைய ஆராய்ச்சி அமைப்பு, மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறதாகவும், 18 வயதிலிருந்து 29 வயது வரை உள்ளவர்களில் பலர் இணையத்தைக் கைவிட்டு வருவதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகிறது. அமெரிக்காவிலுள்ள வயது வந்தோர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களுக்கு இணையம் தேவையில்லை என்று கருதுகின்றனர் எனவும், இணையத்தின் பயன் தங்களுக்கு அவசியமில்லை என்று கூறுகின்றனர் எனவும் சொல்கிறது.
அதேபோல் ஐக்கிய அரசகத்தில் 2000 ஆவது ஆண்டில் ஓர் ஆய்வு நடத்திய போது வயது வந்தோர்களில் 40 விழுக்காட்டினருக்கு இணையத்தில் அக்கறை இல்லை என்றும், அவர்களில் பெரும்பாலோர் கணினியின் விலை அதிகமாயிருப்பதையும், தங்கள் வாழ்க்கைக்கு இணையம் தேவையற்றதாயிருக்கிற தென்ப தையும் குறிப்பிடுகிறார்கள் என்றும் கண்டறியப் பட்டது. இணையம் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மீண்டும் எதிர்காலத்தில் இணைய இணைப்பு பெற்றுக் கொள்ளும் விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தனர். அமெரிக்காவில் 1997-ல் நடந்த ஆய்வில் அமெரிக்காவில் 94 -லட்சம் பேர் இணையம் பயன்படுத்துவதாகவும், பின்னர் 1999 செப்டம்பரில் ஆய்வு செய்தபோது இரண்டு கோடி எழுபத்தேழு இலட்சமாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்ததாகவும் கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வுக் கூற்றுகளை முற்று முடிவாக எடுத்து கொள்ள முடியாது. முதலில் கைவிட்ட வர்கள் மீண்டும் பயன்படுத்தும் நிலை வரக் கூடுமல்லவா? இணையத்தைக் குறித்து அதிருப் தியுற்றவர்கள் அதிக அளவில் இருப்பது வருங்காலத்தில் கணினித் தொழிலுக்கு ஊறு விளையக்கூடும் என்பதைக் காட்டுகிறது. உலகளாவிய அளவில் வலைத் தளம் புகுத்தி இணையம் பெரிதும் விவிவடையும்போது ஏன் இணையத்தைக் கைவிடும் எண்ணம் உண்டாகிறது?
இணைவனத்தின் தன்மையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக இருக்கலாம் என்று கருத்து சொல்லப்படுகிறது. இணையத்தை முதல் முதலாகப் பயன்படுத்தியவர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக வணிகத் தன்மை பெருகியதால் விலகும் எண்ணம் கொள்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. 1999 மத்தியில் உலகளாவிய அளவில் இந்தச் சலிப்பு ஏற்பட்டது.
முதல் இருபது ஆண்டுகளில் கணினி விஞ்ஞானிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் இணைவனத்தைப் போற்றி வளர்த்தார்கள். ஆனால் 1991--ல் கல்வித் துறை மன்றமாக இருந்தது வியாபாரக் கடைவீதியாக ஆக்கப் பட்டது. அதன்பின் வணிக இணையப் பரிமாற்றம் வந்தது. இலாப நோக்கம் அதிகரித்தது.
பல்வகைப்பட்ட வள ஆதாரங்கள் ஒன்று சேர்க்கப்பட்டதாக இணையம் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. பெருமளவில் பொதுத் துறைப் பண்பு இருந்து வரத்தான் செய்கிறது. அநேகத் தளங்கள் இலவசமாகப் பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன. தகவல் தளங்கள், ஆவணக்களரிகள் போன்றவைகளைப் பொறுத்து எல்லோரும் அணுக வாய்ப்பு உண்டாகிவிட்டது. இணையத்தில் ஏற்பட்ட பல மாற்றங்கள் ஆரம்ப கலத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டவர்களை விரட்டிவிட்டன. புதிய மாற்றங்கள் புதிய பண்புகளை வளர்த்துள்ளன.
இன்று இணையம் பயன்படுத்துவோர் நாளை என்ன புதுமை விளையும் என்பதை அறிய வழியில்லை. தொழில்நுட்பம் புதிது புதிதாகக் கொணர்ந்து உயர உயரப் போகும். புதியதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அதை வெறுத்து ஒதுக்கும் மனப்பான்மை சிலருக்கு வரக்கூடும். தொழில் நுட்பப் புதுமைப் படைப்புகளுக்கு ஏற்ப சமுதாயத்திலும் புதுமைப் படைப்புகள் வரக் கூடும். இணையம் பூமியைத்தாண்டி விண்வெளிக்குச் செல்லக்கூடும். ஆனாலும் இணையம் பூமிக்கோளத்தில் செய்ய வேண்டி யவை எவ்வளவோ உள்ளன.
ஆதாரம்: யுனெஸ்கோ கூரியர் |