ஆலு மட்டர்
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு 1/2 கிலோ
பச்சை பட்டாணி ஒரு கப்
வெங்காயம் பெரியது 7
தக்காளி 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
தனியாதூள் 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலாதூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
நெய் 1 மேஜை கரண்டி
எண்ணெய் 2 மேஜைகரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை பெரிதாக நறுக்கி அரைத்து வைத்துக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்

உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய்யை சூடாக்கி சீரகம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுதுபோட்டு வதக்கவும். அத்துடன் அரைத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

நறுக்கி வைத்த தக்காளியை அத்துடன் சேர்த்து தனியாதூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நெய் தனித்து வரும்வரை வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கவும். வேகவைத்த பட்டாணி உருளைக் கிழங்கை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். கொத்தமல்லித் தழைகளை தூவி சூடாகப் பரிமாறவும்.

© TamilOnline.com