தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு 1/2 கிலோ முட்டைகோஸ் 1/2 கப் (நறுக்கியது) காரட் 1/2 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் 2 (பொடியாக நறுக்கியது) பச்சை பட்டாணி 1/2 கப் பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கியது) பிரெட் தூள் கொஞ்சம் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை கொத்துமல்லி 1/2 கப் (பொடியாக நறுக்கியது) பிரெட் ஸ்லைஸ் 6 எண்ணெய் சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி, கேரட், கொத்து மல்லி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை சிறுசிறு உருண்டைகளாக செய்து கைகளால் தட்டையாக்கிக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸ்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது தட்டையாக்கி செய்து வைத்துள்ள வெஜிடபுள் கலவையுடன் பிரெட் கலவையை தோய்த்து பின்னர் பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் இக்கலவையை இட்டு சிவந்தவுடன் எடுக்கவும். இப்போது வெஜிடபிள் கட்லெட் ரெடி. இதை தக்காளி சாஸ¤டன் சாப்பிட சுவையாக இருக்கும் |