தேங்காய் பால் சாதம்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி 400 கிராம்
எண்ணெய் 50 கிராம்
தேங்காய் பால் 4 கப்
வெங்காயம் 2 பெரியது
பட்டை லவங்கம் தாளிக்க
முந்திரி 6
பச்சை மிளகாய் 4
பூண்டு 5 பல்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் பட்டை லவங்கம் போடவும். பிறகு முந்திரி போட்டுச் சிவந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போடவும். வெங்காயம் பொன்னிறமானதும் அரிசியைக் கொட்டிக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து தேங்காய் பால் ஊற்ற வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். இக்கலவையை குக்கரில் வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவும். இப்போது தேங்காய் பால் சாதம் தயார்.

© TamilOnline.com