மாளவிகா-அக்னிமித்ரா, காளிதாஸரின் நாடகத்தை தழுவிய பரதநாட்டிய நாடகமாகும். காளிதாஸர், புகழ் பெற்ற சமஸ்கிருத மொழிப் புலவர். அவர் காளியை தீவிரமாக உபாசித்து, காளியின் மூலமாக விகடத்தையும், ஞானத்தையும் பெற்றவர். காளியை உபாசிப்பவர் எனப் பொருள்படும் காளிதாஸர் என்ற பெயரை அதனால் பெற்றார்.
காளிதாஸருடைய, மாளவிகா-அக்னிமித்ராஒ, அரண்மனை தாதியாக பணிபுரியும் வேற்று தேசத்து இளவரசியின் மேல் காதல் வசப்படும் அரசனின், அந்தரங்க உணர்வுகளையும் மனத்தோன்றல்களையும் சித்தரிக்கிறது. அரசனுடைய காதல் தொடர்புதான், நாட்டியத்தின் உள்ளோடும் கருத்து. அரண்மனையில் வாழும் ண் பெண் இருபாலாரின் காதல், வெறுப்பு, போட்டி, பொறாமை போன்றவை, மடைதிறக்கப் பட்ட நகைச்சுவையாக, பார்பவர்களை குதூகலிக்கச் செய்யும்.
டாக்டர் மாலினி கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில், நாட்டியாஞ்சலி இதனை படைக்கிறது. இந் நிகழ்ச்சி Multiple Sclerosis அமைப்புக்காக நிதி திரட்டவுள்ளது.
இதனை, ஜூலை மாதம் 22ம் தேதி, சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு வால்நட், கலிபோர்னியாவில் உள்ள சான் ண்டனியோ கல்லூரியில் காணலாம். |