இசைக்கு வயசா? - T.V. கோபால கிருஷ்ணனுடன் சந்திப்பு
வணக்கம்

நீங்கள் இப்போது அமெரிக்காவில் Bay Areaவுக்க வந்து நிறைய கச்சேரிகள் செய்திருக்கிறீர்கள். உங்கள் கச்சேரிகளைக் கேட்டவர்கள் அவை மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சிகள் என்று பாராட்டியுள்ளார்களா? நீங்கள் உங்களுடைய இந்தப் பயணத்தில் Bay Areaவிலே மட்டும் தான் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறீர்களா அல்லது வேறு இடங்களுக்கும் போனீர்களா?

இந்த முறை நான் அமெரிக்கப் பயணத்தில் முதலில் டெட்ராய், சிகாகோ, அட்லாண்டா, டல்லஸ், மேரிலாண்ட், போன்ற இடங்களுக்கெல்லாம் போய்விட்டு இங்கு Bay areaவுக்கு வந்தேன். இங்கே இரண்டு மூன்று நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு இசையைக் கற்றுக்கொடுக்கும் முறையைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லித் தந்தேன் மனதுக்குத் திருப்தியாக இருந்தது.

நீங்கள் எல்லா இடங்களிலும் Classical நிகழ்ச்சிகள் தான் செய்தீர்களா? அல்லது தமிழ்பாட்டு மற்றும் வேற்று மொழிப்பாடல்கள் என்று நிகழ்த்தினீர்களா? ஏனென்றால் நீங்கள்தான் எல்லாத்துறையிலும் வல்லவராயிற்றே

இது ஒரு வேடிக்கையான கேள்வி. எந்த இசை காதுக்கு இன்பம் தருகிறதோ அதெல்லாமே என்னைப் பொறுத்தவரை Classical இசை என்று நினைப்பவன் நான். அதில் என்னுடைய இசை இருக்கிறதா என்று பார்ப்பேன். என்னுடைய இசை என்றால் கருநாடக இசை அப்படியிருந்தால் நன்றாகவும் மனதுக்கு இன்பமாகவும் இருக்கும் அந்த முறையில் பார்த்தால் நான் எல்லா இடங்களிலும் கருநாடக இசையைத்தான் பாடினேன். ஆனால் சில இடங்களில் மக்களுடைய விருப்பத்திற்கிணங்க இரண்டு மூன்று இடங்களில் இந்துஸ்தானி மற்றும் பல இந்திய மொழிகளிலே என் மகள் தேவி பாடினாள்.

'Global Fusion' என்று சொல்லும் எல்லாத்தையும் கலந்து கட்டி வழங்கம் 'Fusion' என்று நாம் சொல்கிறோமே அப்படி ஒரு Fusion வேண்டுமென்று போர்ட்லாண்டில் கேட்டார்கள். அதாவது நம்முடைய கருநாடக இசையின் தன்மைகளை விடாமலேயே மேற்கத்திய வாத்தியங்களையும் மேற்கத்திய இசைத் தத்துவங் களையும், அதாவது இந்தக் காலத்து Jazz என்று சொல்வார்களே அதையும் சேர்த்து காதுக்கு இன்பமான ஒரு இசையை நம்முடைய வாத்தியங் களையும் சேர்த்துக் கொடுக்கும் படியான ஒரு முயற்சி. அதை நாங்கதான் முதலில் கொடுத் தோம். பிறகு இப்போது எல்லோரும் பண்ணுகிறார்கள்

ஆமாம்! நீங்கதான் முதலில் ஆரம்பித்தீர்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

'Fusion' என்ற ஒரு நிகழ்ச்சியை நான் முதன் முதலில் 1954 - 55வது ஆண்டிலே ஆரம்பித் தேன், இப்போதெல்லாம் 'Fusion' என்ற பெயரில் 'Confusion' வந்து விடக்கூடாதே என்பதற்காக இப்போது நான் அதிகமாகச் செய்வதில்லை.

போர்ட்லாண்டில், நம் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் நிவாரண நிதிக்காக Fusion நிகழ்ச்சியைக் கேட்டார்கள். அந்த ஊரிலே பிரபலமான Jazz இசைக்கலைஞர்கள், ஒரு சாக்ஸபோன், டிரம்ஸ், பியானோ எல்லாம் சேர்ந்து நம்முடைய இசையுடன் என்னுடைய பாட்டு, வயலின் எல்லம் சேர்ந்து நன்றாக அமைந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்குப் பிறகு Bay Area நிகழ்ச்சிகளுக்கு வந்தேன் பெரிய நல்ல நிகழ்ச்சிகள் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் நான் சபாக்கள் மூலமாக வரவில்லை. ஆனால் நிகழ்ச்சிகளுக்கு நிறைய ஜனங்கள் வந்திருந்தார்கள். 'பாரதி கலாலயா' என்ற அந்தப் பள்ளிக்கூடத்து மாணவர்களுக்கு ஒரு முழுநாள் நிகழ்ச்சியாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இசைப் பயிற்சி அளிக்கும் முறை பற்றிய ஒரு Workshop நடத்தினேன். மிகவும் சிறப்பாக நடந்தது. நிறைய ஜனங்கள் வந்திருந்தார்கள். பிறகு அவர்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியையும் நடத்தினேன். இதைப் பார்க்கும் போது Bay Areaவில் நம்மவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு இசையிலே நல்ல ஆர்வமும் இருப்பது தெரிகிறது.

நீங்கள் இப்போது Lec-Dem workshop செய்வது போல் செய்திருக்கிறீர்கள். அதில் இசையைக் கற்றுக் கொள்வதற்கு ஒரு வயது வரன்முறை அல்லது சின்ன வயதிலே கத்துக்கக் கூடாது, ஓரளவு வயதான பிறகு இசை வராது போன்ற பிற இசையாசிரியர்கள் கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? Workshop என்று நடத்தும்போது சின்ன குழந்தைகளை மட்டுதான் எடுத்துக் கொள்வீர்களா?

இசைக்கு வயசே கிடையாது. ஆர்வம்தான் தேவை எந்த வயதிலே ஆர்வம் ஏற்பட்டாலும், இசையைப் பற்றிக் கொஞ்சம் அறிந்திருந்தாலும் கற்றுக்கொள்ள முயற்சியும் இருந்தாலும் போதும் இசையை நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். இது முதலாவது. இராண்டாவதாக ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு எந்த விதத்தில் கற்றுக் கொடுத்தால் ஆர்வமாகக் கற்றுக் கொள்வார்கள் என்று தெரிந்து அந்த முறையில் கற்றுத் தரவேண்டும். முதல்லே ஸரிகம என்று கற்றுக் கொடுத்து அவர்கள். உயிரை வாங்கினால் இதிலே அவர்களுக்கு 'சொரத்தே' (ஆர்வம்) இருக்காது. பாடல் நிகழ்ச்சிகளில் பாடும் குழந்தைகளைப் பாடவைக்க வேண்டும். அதேபோல் வயதானவர்களில் இசை கற்றுக் கொள்ள வேண்டுமென்று வந்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இசை நிகழ்ச்சிகளைச் செய்து பேரும் புகழும் அடைவதற்காக வருகிறார்கள் என்ற எண்ணமும் நமக்கு இருக்கக் கூடாது. அதனால் அவர்கள் எந்த அளவுக்கு முயற்சி எடுக்க முடியும்; எந்த அளவிற்கு உழைக்க முடியும் என்று தெரிந்து கொண்டு, அந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

நீங்க சொல்றதிலே ஒரு 'லாஜிக்' இருக்கிற மாதிரி தெரிகிறது ஏனென்றால் நாம் எப்போதும் 'End Product'ஐ தான் Aim பண்ணுகிறோம் இல்லையா?

நன்றாகப் பாடுவதற்குத்தான் எல்லோருக்கும் ஆசை, Medicine மாதிரி, Exercise மாதிரி இருக்கிறது எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். தகுந்தபடி தரவேண்டுமென்று சொல்கிறீர்கள். அப்படித்தானே அவசியம். அப்படித்தான் வெறும் எக்ஸர்ஸைஸ் என்று வரிசை தாளம் என்று கொடுக்காம; எதுக்காக எக்ஸர்ஸைஸ் என்ற கேள்வி எழும், எதுக்காக என்கிற கேள்வி எழும்போது அதைப் புரிந்து கொண்டால்தான் அதற்கான அப்ளிகேஷன் இருப்பது புரியும். இப்பொழுதெல்லாம் புதிய பாடமுறையெல்லாம் செய்து வருகிறார்கள்.

இசைக்கு மட்டுமே பழங்காலத்துப் பாடமுறை என்று இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல் இப்போதெல்லாம் கம்யூட்டர். இன்டர்நெட் என்றெல்லாம் இருக்கின்றன. அதையே நாம் என் பயன்படுத்தக் கூடாதுன்னுதான் அந்த முறையிலே நினைத்துப் பார்க்கிறேன்.

ஆமாம்! இப்போது திறமையுள்ள நிறைய பேருக்கு குருவாயிருக்கிற நீங்கள் சொல்லும்போது அது நிச்சயமாக ஒரு நியாயமான தாகத்தான் இருக்கும். நீங்களாகவே முயற்சிசெய்து இன்டர்நெட் துறையிலே ஏன் ஒன்றுமே செய்யவில்லை?

அதுதான் இப்போது இந்த முறை Bay Area வந்திருக்கும்போது அதற்கான ஆர்வம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன முயற்சி செய்யலாம் என்று தான் நினைக்கிறேன். மக்களுக்கிடையே அதற்கு வரவேற்பிருக்கிறதா என்று முதலில் தெரிந்தால் தான் பண்ண முடியும். ஏனென்றால் அதில் நிறைய முதலீடு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது அதனால் மக்கள் அதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இசையை கற்றுக் கொள்பவர்களுக்கு வயது முக்கியமில்லை. அதாவது குறிப்பிட்ட தேவை, நேரம் என்று கிடையாது. Compromise பண்ணிக்கொள்ளலாம். அதாவது கற்றுக் கொடுப்பது, கற்றுக்கொள்வது இரண்டுமே Compromise ஆகிவிடும் ஒரு சூழ்நிலை அதில் இருக்கிறது. அதனால் இசையைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சிபெறவும் இசை பற்றித் தெரிந்து கொள்ளவும் சுலபமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

நிச்சயமாக! நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு இசை ஆர்வம் உள்ளவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் அதை பிரபலப்படுத்துவதற்கு முயற்சி எடுத்துக் கொள்வோம்.

உங்கள் பதில் என்னை மிகவும் ஊக்குவிப்பதாக உள்ளது. மீடியா மூலமாக எந்த அளவுக்கு இன்டர்நெட் இருந்தாலும் கூட, 'Success Information' என்று நாம் சொல்கிறோம் அப்படி ஜனங்களுக்குத் தெரிவிப்பதில் அதனுடைய 'Impact' அதிகமாகத்தான் இருக்கிறது.

எங்களுடைய 'தென்றல்' வாசகர்கள் உங்களுக்கு Survey மூலமாக தங்கள் ஆர்வத்தைத் தெரிவிக்கலாமென்றால் உங்கள் email முகவரி சொன்னால் நன்றாக இருக்கும்.

'தென்றல்' பத்திரிகை Bay Areaவில் பிரபலமான மாத இதழ் என்று தெரிய வந்தது. நானும் இந்த இதழைப் பார்த்தேன் அருமையாக இருக்கிறது. ஜனங்களுக்கு மிகவும் பயன்படும் மாத இதழாக இருப்பது பெருமைக்குரிய விஷயம் இதுமேலும் சிறப்பாக வளரவேண்டும்.

'தென்றல்' மூலமாக சிறப்பாக நல்ல முயற்சிகளை ஊக்குவிப்பதுதான் எங்கள் குறிக்கோள்

என்னுடைய முயற்சிக்கு ஜனங்களுடைய Reaction என்று சொல்லுகிற பிரதிபலிப்பு என்ன என்பதை எனக்கு email மூலமாகத் தெரிவிக்கலாம்

email: visionmusika@yahoo.com

வாசகர்களே! இந்த முகவரியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

கோபாலகிருஷ்ணன் அவர்களே, நீங்கள் இந்தியாவிலே இதுபோல் வேறு எதாவது Institutionalise செய்திருக்கிறீர்களா இல்லே, தனியாக ஏதாவது...?

தனிப்பட்ட நிலையிலே இல்லை. தனிப்பட்ட நிலையிலே என்னுடைய ஏகப்பட்ட சிஷ்யர்கள் நன்றாக நல்ல நிலையிலே இருக்கிறார்கள். நான் ஒருவன்தான் இதைச் செய்ய முடியும் என்ற நிலை வரக்கூடாது என்று நான் நினைத்தேன் வருங்காலத்திற்கு, என்னுடைய பாட முறையிலே, என்னுடைய உள்நோக்குக் கொண்ட ஒரு ஸ்தாபனம் வேண்டும் என்ற ஓர் ஆசையினாலே, நம்பிக்கையினாலே, 'வித்யாபீடம்' என்று ஒரு நிறுவனம் சென்னையிலே ஏற்படுத்தினேன். ACADEMY OF INDIAN MUSIC என்று ஆங்கிலத்தில் அதற்குப் பெயர் AIM என்று பெயர் அதில் நிறைய குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் இசைத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் முன்னுக்கு வருவதற்கு உண்டான வாய்ப்புகள் நிறைய உண்டு காரணம் Fine Arts University யுடன் நாங்கள் இணைந் துள்ளோம். அதனால் இசையில் டிப்ளமா, மற்றும் ஹானர்ஸ் பட்டப்படிப்புக்கு பயிற்சி அளிக்கி றேன் கலைத்துறைகளில் பட்டப் படிப்புக்கு பயிற்சி அளிக்க முயற்சித்துக் கொண்டிருக் கிறேன். இசைத்துறையில் பரிமளிக்க சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அதில் வெற்றியே பெற கடவுளின் அருளைப் பிரார்த்திக்கிறேன்.

'Crash Courses' மாதிரி ஏதாவது கற்றுக் கொள்ள உங்கள் நிறுவனத்துக்கு வரலாமா?

வரலாமே நிறையபேர் அப்படி வந்து கொண்டிருக்கிறார்கள் லண்டன், ஜெர்மனி, பாரீஸ் போன்ற நாடுகளிலிருந்து கூட வருகிறார்கள். இந்தியாவிலேயே மும்பாய், டில்லியிலிருந்தெல்லம் கூட வருகிறார்கள். மேலை நாடுகளிலிருந்தெல்லாம் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து முந்திவந்து கொண் டிருக்கிறார்கள். இப்போது நானும் பதினைந்து ஆண்டுகளாக அமெரிக்கா வரவேயில்லை. அதனால் நான் இசைத் துறையிலே இருப்பதுக் கூடத் தெரியாது.

ஆனால் நான் கேள்விப்பட்டது நீங்கள் இந்த முறை எல்லா இடங்களிலும் உங்கள் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியிருக் கிறீர்கள். ரொம்பவும் successful என்று.

கடவுள் புண்ணியத்திலே நான் எங்கு இசை நிகழ்ச்சி செய்கிறேனோ அங்கு அதைக் கேட்டவர்களிடமிருந்து, அடுத்த நிகழ்ச்சிக்கு நான் செல்லுமிடத்திற்கு ஏராளான email வந்து சேருகின்றன. "இது போன்ற ஓர் இசை நிகழ்ச்சியை நான் கேட்டதே கிடையாது. நீங்கள் ஏன் அடிக்கடி வருவதில்லை?" என்றெல்லாம் கேட்கிறார்கள்.

அது நானும் கேட்க வேண்டிய ஒரு கேள்விதான், நீங்கள் இந்தியாவில் உள்ள நிறுவனம் போன்று அமெரிக்காவில் ஒரு பிராஞ்ச் துவங்கலாமே.

நிச்சயமாக ஜனங்களுடைய ஆதரவு இருந்தா எதையும் செய்ய முடியும்.

உங்களைப் போன்ற ஒரு குரு இருந்தா, Bay Areaவுக்கும் மற்ற இடங்களுக்கும் ஆண்டுக்கு ஓரிருமுறை வந்தீர்கள் என்றால் இசை ஆர்வமுள்ளவர்களுக்கெல்லாம் பயனுடையதாக இருக்கும்மென்று நினைக்கிறேன்

பார்ப்போம் எந்த அளவிற்கு ஆர்வம், சூழ்நிலை, நம்மிடமுள்ள தன்னம்பிக்கை உள்ளதோ இவற்றிற்குத் தகுந்தபடி நிச்சயமாக என்னால் இயன்றதை இசைக்காகச் செய்வேன் கடவுளுடைய கிருபை இருந்தால் நிச்சயமாக எல்லாம் நல்லபடியாக நடக்கும்

நன்றி! உங்களுடைய Busy Schedule க்கு நடுவே 'தென்றல்' க்குப் பேட்டி அளித்ததற்கு 'தென்றல்' சார்பில் உங்களுக்கு எங்கள் நன்றி. 'தென்றல்' வாசகர்கள் அவர்களால் முடிந்த உதவியும் ஆதரவும் தருவார்கள் என நம்புகிறேன். மிக்க நன்றி.

நன்றியை நான் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன் ஏனென்றால், நாம் இருக்கின்றோம்; நாம் நம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம்; தொண்டு செய்து கொண்டிருக்கின்றோம் என்று நான் பறை சாற்றிக் கொண்டிருக்க முடியாது. உங்களு டைய 'தென்றல்' போன்ற பத்திரிகை மூலமா கத்தான் ஜனங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அதை நீங்கள் தெரிவிக்கின்றீர்கள் உங்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம்.

© TamilOnline.com