சமீபத்தில் தென்றல் இதழை படிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதழினை, மிகவும் விரும்பிப் படித்தேன். உங்களது நற்பணி தொடரட்டும்
பானு சுப்பிரமணியம்.
*****
அஞ்சல் மூலம், தென்றல் இதழ் இன்று கிடைக்கப்பெற்றேன். இந்த அளவுக்கு, அழகான வடிவமைப்புடன், ஒரு தமிழ்ப் பத்திரிக்கை, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் என்று கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை. இதைப் படிக்கும் சந்தோஷத்தை என் நண்பர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுவேன். நல்ல முயற்சி.
திருமதி சிவசுப்பிரமணியம்.
*****
தங்களின் தென்றல் இதழ், தமிழர்களைத் தென்றலாக வருடியதற்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விஷாலி, ஸான் ப்ரூனே
*****
சாவியை நினவுகூர்ந்து எழுதியிருந்த கட்டுரையும், வாஷிங்டனில் திருமணம் நாடகத்திலிருந்து ஒரு பகுதியை அளித்திருந்ததும், மறைந்த எழுத்தாளருக்கு சரியான முறையில் அஞ்சலி செலுத்துவதாக அமைந்திருந்தது. உருளைக்கிழங்கு அல்வாவா..? என் மனைவி என்னை அல்லவா கொடுமைப் படுத்திவிட்டாள் சாப்பிடச்சொல்லி! லாவண்யாவின், பேரழிவில் உதவாதப் பேரழகிகள் கட்டுரையில் இருக்கும் கோபமும் ஆதங்கமும் நியாயமானதே! மிஸ்டர் பொதுஜனத்தின் ஞாபகமறதி லாவண்யாவுக்கு இல்லாமல் போனது, அழகிகளின் குற்றமா..?
ராகவன், நியூயார்க்.
*****
சிறுகதைகள், மோசமில்லை என்றாலும், விருவிருப்பாக இல்லை. ஒவ்வொரு இதழிலும், ஒரு முக்கிய மையக் கருத்தைக் கொண்டு தயாரிக்கிறீர்களா..? இந்த இதழில், பெண்கள் தினத்தை ஒட்டிய கட்டுரைகள் நன்றாக இருந்தன. மதுரை சின்னப்பிள்ளையின் 'இன்டெர்வ்யூ' வித்தியாசமாக இருந்தது.மோகினியாட்டம் கல்யாணி குட்டிம்மாவினைப் பற்றிய கட்டுரையும், 'இன்·ப்ர்மேடிவாக' இருந்தது. வித்தியாசமான பத்திரிக்கை.
சுமா, மில்பிடஸ் |