க்ளின்டனாதித்யன் கதை!
சமீபத்தில் அமொரிக்க அதிபர் பதவியை விட்டு நீங்கிய பில் க்ளின்டனின் பதவி காலம், அமொரிக்க வரலாற்றிலேயே மிகவும் சிறந்த பதவி காலங்களில் ஒன்று என்பது, தீவிரமான Republican கட்சியாளர்கள் தவிர மற்றவர் ஒப்புக் கொள்ளக்கூடியதுதான். அவர் ஆட்சியை ஆரம்பிக்கும் போது அரசாங்கக் கஜானா பெருங் கடன் வாங்கித்தான் நடை பெற்றுக் கொண்டிருந்தது. இப்போதோ வருடா வருடம் வரும் அதிகப் பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்று எல்லோரும் கையைத் தீட்டிக் கொண்டு பந்திக்கு முந்தப் பார்க்கிறார்கள். அதிகம் என்றால், ஒன்று இரண்டு டாலர்கள் இல்லை - பத்து வருடங்களுக்குள் ஐந்து டி¡ரில்லியன் (trillion) டாலருக்கும் அதிகம் வரும் என்று ஒரு கணக்கு. ஐந்துக்கு பிறகு பனிரெண்டு பூஜ்யங்கள்! எழுதிப் பார்த்தாலே கை வலிக்கு தைலம் தேய்க்க வேண்டியதுதான்! அயர்லாந்து உடன்பாடு, நடுகிழக்கு ஆசியாவில் அமைதி நிலை முன்னேற்றம் என்று இன்னும் பல சாதனைகள் க்ளின்டன் பதவி காலத்தில் நடை பெற்றன. அவை அனைத்துக்கும் அவர்தான் காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவர் தலைமை அவற்றுக்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

பில் க்ளின்டன் ஒரு மிகவும் புத்திசாலியான மனிதர் என்பதை அவரைப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் எல்லாருமே ஒப்புக் கொள்வார்கள். அவர் எதாவது கொள்கை விவரத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால்,

மணிக் கணக்காக, விவரத்தின் மேல் விவரமாக, கேட்பவர்கள் தலை சுற்றும் அளவுக்கு பேசக் கூடியவர். கிடைப்பதற்கு அ¡ரிதான Rhodes Scholarship வாங்கி Oxford பல்கலைக் கழகத்துக்கு சென்று படித்தவர்.

அரசியல் விளையாட்டிலும், அவரை மிஞ்சியவர் யார் என்று கேட்டால் சொல்லத் தொரியாமல் தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியதுதான்! எத்தனை இக்கட்டான நிலைமையில் மாட்டிக் கொண்டாலும், கூடு விட்டு கூடு பாயும் விக்கிரமாதித்தன் கதை போல பாய்ந்து டபாய்க்கக் கூடியவர். 1994-ஆம் வருடம், அமொரிக்கக் காங்கிரசின் கீழ்ச் சபை Republican கட்சிக்குக் கிடைத்தது. குடியரசுத் தலைவருக்கு மிகவும் சங்கடம் ஆக வேண்டிய நிலைமை. ஆனால், க்ளின்டனோ மிகச் சாமர்த்தியமாக, அவர்கள் தட்டியில் பாய்ந்தால் இவர் கோலத்தில் பாய்ந்து அரசாங்கத்தையே Republican கட்சியினர் மூடுமாறு செய்து, மக்களிடமிருந்து மிக்க அனுதாபம் பெற்று விட்டார். Republican கட்சியினரோ, எப்படி தாங்கள் அந்த கதிக்கு வந்து விட்டோம் என்று குழம்பித் தவித்தனர்!

அப்படிப் பட்ட, திறமைசாலி, புத்திசாலி, அரசியல் சாமர்த்தியசாலி பில் க்ளின்டன், பலப் பல சமயங்களில் ஒரு படு முட்டாளும் செய்து மாட்டிக் கொள்ளாத மடத் தனமான கா¡ரியங்களைச் செய்து மாட்டிக் கொண்டு திரு திருவென ஆடு திருடிய கள்ளனைப் போல முழிப்பானேன்?!

க்ளின்டன் மட்டுமா? திறமை வாய்ந்த பல அமொரிக்க குடியரசுத் தலைவர்கள் இது மாதி¡ரி மடத்தனமான கா¡ரியங்களைச் செய்து மாட்டிக் கொண்டு அவதிப் பட்டிருக்கிறார்கள். ஏனப்படி ஆக வேண்டும்? யா¡ரிட்ட சாபமோ?!

ஆஹா, ஆமாம், அங்குதான் இது வரை யாருக்குமே தொரியாத ஒரு பொரிய மர்ம விஷயமே இருக்கிறது. வாருங்கள் என்னோடு நம் கற்பனை உலகுக்கு, விளங்கிடும் இந்தப் புதிர் உங்களுக்கு.

நான் இந்த முறை இந்தியாவிலிருந்து திரும்ப வந்து கொண்டிருந்த போது விமானத்தில் பக்கத்து ஸீட்டில் ஒரு பொரியவர் அமர்ந்திருந்தார். ஏதேதோ பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து க்ளின்டன் லீலைகள் பற்றியும் பேச ஆரம்பித்தோம். பொரியவர் அதன் உள்மர்மம் தனக்குத் தொரியும் என்று சொல்லி விவாரிக்க ஆரம்பித்தார்:

துர்வாச முனிவாரின் சந்ததியிலிருந்து தோன்றிய முன் கோப யோகி ஒருவர் பூமியைச் சுற்றி நடை யாத்திரையாகத் தவம் செய்வதாக விரதம் பூண்டு வாஷிங்டனை வந்தடைந்தார். Forrest Gump அந்த யோகி வம்சத்தில் வந்தவர்தான் என்பதாக ஒர் ஐதீகம் உண்டு.

(அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நான் குறுக்கிட்டேன்: "இது என்ன நம்பும்படியான கதையாகவே இல்லையே?" பொரியவர் பதில்: ஏனய்யா, உலகத்தில் உண்மையில் நடப்பதே நம்பும் படி இல்லையே, இதை மட்டும் நம்பினால் என்ன, குறைந்தா போய் விடுவீர்! மூளையைக் கழற்றி வைத்து விட்டு சும்மா மேலே கேளும்!)

அந்த யோகி வெள்ளை மாளிகையை வேடிக்கை பார்க்க சென்றிருந்த போது மாளிகை முன்பு இருந்த மைதானத்தில் புல் தடுக்கி கீழே விழுந்து விட்டார். அப்போது அதிபராக இருந்தவர் பார்த்து கேலியாக "மடத்தனமாக விழுந்தாயே" என்று சி¡ரித்து விட்டார். பக்கத்தில் இருந்த ஜால்ராக்களும் கை கொட்டி சி¡ரித்து கேலி செய்தனர். அவ்வளவுதான் - யோகிக்கு மூக்கின் மேல் பிறந்தது கோபம்! அன்றிலிருந்து ஆளும் அத்தனை அதிபரும் அவ்வப்போது மடத்தனமாக நடந்து மக்களின் கேலிக்கு ஆளாக வேண்டும் என சாபம் இட்டார்.

(நான்: "இது என்ன சாணக்கியன் கதை மாதி¡ரி இருக்கே? யோகி என்ன அதிபரை கவிழ்க்க சந்திரகுப்தனை தேடிப் போனாரா?"

பொரியவர்: புல் தடுக்கிப் பயில்வான்கள் எல்லாருமே சாணக்கியன்தானா? இப்படி நடு நடுவில் நச்சாரித்தால் கதையை நிறுத்திவிடுவேன்!

நான்: அய்யோ, சொல்லுங்க, ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, இனிமேல் குறுக்க பேச மாட்டேன்.)


வெவ்வேறு தலைவர்களுக்கு இந்த சாபம் வெவ்வேறு மாதி¡ரி பலித்தது. ஒரு குடியரசுத் தலைவர் பாவம், பதவித் துவக்க விழாவன்று கொட்டும் குளிர் மழையில் வெளியில் நனைந்து கொண்டு நின்று மணிக் கணக்காக பேசினார். புத்தியுள்ளவர் சாதாரணமாக செய்யும் கா¡ரியமா அது? மடத்தன சாபந்தான் காரணம்! விளைவு? சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பாரிதாபமாக இறந்தார். அவர் அந்த சாபத்துடன் இன்னும் பலமான வேறு சாபங்களையும் பெற்றிருந்தாரோ என்னவோ?!

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சாபத்தின் பலன் இன்னும் நன்றாகவே தொரிந்தது. அதற்குக் காரணம் தலைவர்கள் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. பத்தி¡ரிகையாளர்கள் ஜால்ரா தட்டுவதை விட்டு விட்டு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அதிபர்களின் கா¡ரியங்களை மோப்பம் பிடித்து மக்களுக்கு யார் முதலில் அறிவிப்பது என்று அலைவதால்தான். அதற்கு முன் தலைவர்கள் தவறு செய்தால், அதுவும் தனிப்பட்ட முறையில் தவறி நடந்து கொண்டால் அவை மூடி மறைக்கப் பட்டன. அமொரிக்க அதிபர் என்பவர் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர். அத்தகைய உயர்ந்த ஸ்தாபனத்துக்கு ஒரு இழுக்கு வந்துவிடக் கூடாது என்று பலரும் எண்ணி ஒரு எழுதி வைக்காத உடன்பாட்டின் படி கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணியத்துடனேயே கண்டித்து வந்தனர். சில விஷயங்கள் தரைவி¡ரிப்பின் கீழேயே தள்ளி வைக்கப் பட்டன.

உதாரணமாக, ஜான் கென்னடி தன் தனி வாழ்வில் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் மேலாகவே லீலை புரிந்ததாகத்தான் இப்போது பல விவரங்கள் வெளி வந்துள்ளன. ஆனால் அப்போது அந்த மாதி¡ரி விஷயங்களை எந்த பத்தி¡ரிகையாளரும் பிரசு¡ரிக்க முன் வரவில்லை. நிக்ஸன் காலத்திலிருந்துதான் சாபத்தின் பலன் மிகவும் வெளிப்படையாக ஆரம்பித்தது! அவர் அலுவலகத்தில் பேசியதையெல்லாம் டேப் செய்து மாட்டிக் கொண்ட மடத்தனம் ஏன் - சாபத்தினால் தான். ஜெரால்ட் ·போர்ட், ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜ் புஷ், எல்லாருமே சாபத்தினால் கேலிக்குள்ளானார்கள். ரானல்ட் ரேகனுக்கோ, சாபத்தின் விளைவே தேவையில்லாமல் போய் விட்டது, யாருக்கும் வித்தியாசம் தொரியவில்லை! பில் க்ளின்டன் விஷயத்தில் யோகியின் சாபம் கில் ப்ளின்டனாக உருவெடுத்தது. (நான்: யார் அது கில் ப்ளின்டன்?

பொரியவர் முறைத்தார்: அதுதானே சொல்ல வரேன், அதுக்குள்ள என்ன முந்தி¡ரிக் கொட்டை மாதிரி?)

அதுதான் பில் க்ளின்டனின் மடச் சகோதரன். அவருக்குள்ளேயே எப்போதும் வாழ்ந்து வருபவன். பொதுவாகத் தூக்கத்தில் தான் காலம் கழிப்பான். ஆனால், அவ்வப்போது திடீரென விழித்துக் கொண்டு, விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மீண்டும் பில் க்ளின்டனின் அறிவை ஆக்கிரமித்துக் கொள்வான். விளைவுதான் நமக்குத் தொரியுமே!

க்ளின்டன் அதிபர் ஆவதற்கு வெகு நாட்களுக்கு முன்னமே சாபம் பலித்து விட்டது! அவருக்கு 17 வயது ஆகும் போது ஜான் கென்னடியைப் பார்த்து கை குலுக்கியதும், தானும் அமொரிக்க அதிபராக ஆகியே தீர வேண்டும் என்று முடிவு செய்தார். அவ்வளவுதான். கென்னடியிடமிருந்து அவருக்கும் சாபம் தொத்திக் கொண்டது.

(நான்: ஐயையோ, அது ஒட்டுவாரொட்டியா, என்ன? நான் அடுத்த தடவை வெள்ளை மாளிகை விஜயம் செய்யும் போது நிச்சயமாக குட்டி புஷ்ஷ¤டன் கை குலுக்க மாட்டேன்!

பொரியவர்: ஐயா, உமக்கு அந்த கவலை வேண்டாம், இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, எந்த ஜன்மத்திலும் நீர் அமொரிக்க அதிபராகும் துர்பாக்யம் உமக்கு இல்லை!)

கென்னடியைச் சந்தித்த பிறகு சில வருடங்கள் ஆனதும் க்ளின்டன் 29 வயதிலேயே Arkansas மாநில கவர்னர் ஆனார். அப்போதுதான் அவர் பாலா ஜோன்ஸைப் பார்த்தார்.

உடனே, ... டொய்ய்ங்ங்க்! ...

(நான்: அது என்ன டொய்ய்ங்ங்க்?!

பொரியவர்: அதுதான் கில் ப்ளின்டன் விழித்துக் கொண்டு க்ளின்டனின் அறிவை ஆக்கிரமிக்கும் சவுண்ட் எ·பெக்ட்!)


பின்னால் அதிபர் ஆகும் ஆசை உடைய ஒருவர், கண்ணை மூடிக் கொண்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால் கில் ப்ளின்டன் ஏறிக் கொண்டதால், அவர் பாலாவைக் கண்டு ஸைட் அடிக்கப் போக, விஷயம் ஏதேதோ கசமுசவில் போய் முடிந்தது! அத்தோடு விட்டதா சனி?! இன்னும் தொடர்ந்தது. பாலாவுக்குப் பிறகு ஜென்னி·பர் ·ப்ளவர்ஸ்.... டொய்ய்ங்ங்க்! ... அதற்குப் பிறகு? இந்தக் கதைகள் ஏறிக் கொண்டே போக, க்ளின்டன் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் போது அவருடைய ஆலோசகர்கள் இந்த க்ளின்ட லீலா புரளிகளைச் சமாளிக்கவே ஒரு பொரிய படையை நியமிக்க வேண்டியதாப் போச்சு!

இப்படியாகத்தானே, ஒரு வழியாக க்ளின்டனும் குடியரசுத் தலைவராகி வெள்ளை மாளிகை சென்றடைந்தார் ...

(கிருபானந்த வாரியாரின் புராணம் போல பொரியவர் ராகமாக இழுத்தார். நானும் பழைய நினைவில் அரோகரா என்று கோஷம் போட, பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதி¡ரி பார்க்க, பொரியவர் மீண்டும் என்னை முறைத்து விட்டு கதையைக் தொடர்ந்தார்.)

வெள்ளை மாளிகையில் தீவிர கொள்கை வேலை. முக்கியமான மந்தி¡ரிகள் கூட்டம். க்ளின்டன் ஒரு

பிரமாதமான திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று சொல்லிக் கொண்டிருந்தார்: " ... நாம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு 0.468 சதவீத பகுதியை எடுத்து, ஒரு டிரஸ்டில் போட்டால் வரும் வருமானத்தில் ..." அவர் பார்வை ஒரு கணம் அறைக்கு வெளியில் பட்டது.

... டொய்ய்ங்ங்க்! ...

"... ஹூம், கொஞ்சம் இருங்கள் வந்து விடுகிறேன். (முன்னறைக்கு அவசரமாகப் போய்) யாரும்மா பாப்பா நீ? உன் பேரென்ன? ஓ, அதுதான் மார் மேல badge-ல இருக்கே - மானிகா லூவின்ஸ்கி. ஹி...ஹி...ஹி... intern-ஆ வரணுமா, அதுக்கென்ன, தாராளமா, இன்னிக்கே சேந்துடு, என்ன? சாரி, நாம அப்புறமா பேசலாம்! ஹி ... ஹி ...!"

இந்த விஷயம் எங்கே போய் முடிஞ்சுதுன்னு ஜட்ஜ் ஸ்டார்ர் தான் புட்டு புட்டு வச்சிட்டா¡ரில்ல! அதனால பில் க்ளின்டனுக்கு எவ்வளவு கஷ்டம். வரலாற்றிலேயே impeachment வாங்கிய இரண்டாம் அதிபர் என்ற பெரும் இழுக்குக்கு ஆளாக வேண்டியதாகப் போயிற்று.

அதிபர் பதவியை விட்டு நீங்கியும் சாபம் விட்ட பாடில்லை. கில் ப்ளின்டனுக்கு விட்டுப் போக பிடிக்க வில்லை போலும்! அதனால் தான் வெள்ளை மாளிகை furniture எடுத்துக் கொண்டு போனது, மாமன், மச்சான், திருடன், முரடன் என்று கண்மண் தொரியாமல் கண்டபடி, நூற்றுக் கணக்கில் மன்னிப்பு கொடுத்தது, மன்ஹாட்டனில் பல நூறாயிரம் செலவில் office வைத்து அப்புறம் ஜகா வாங்கியது, எல்லாம்!

இன்னும் எவ்வளவு, எவ்வளவு முறை வேதாளம் முருங்கை மரம் ஏறப் போகிறதோ, பொறுத்திருந்து பார்க்கலாம்!

அத்துடன் பொரியவர் கதையை முடித்தார்.

ஹூம், அப்படியும் இருக்கலாமோ?!

உலகெங்கிலும், வரலாறு முழுவதும், பல பெருந்தலைவர்கள் பொரிய சாதனைகளுடன் சில தவறுகளையும் செய்வது சகஜந்தான். பொதுவாக, அவர்களூம் மனிதர்கள் தானே, எவரும் perfect

இல்லை என்று விட்டு விடலாம். ஆனால், பில் க்ளின்டன் விஷயத்தில் அந்த இரு முனைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகவும் அகலம். அதுவும் அவர் செய்து மாட்டிக் கொண்ட விஷயங்கள் இப்படியும் ஒரு அதிபர் சில்லறைத் தனமாக செய்வாரா என்று எண்ணி வருந்தத் தக்கவை. எத்தனை பெருமையுடன் இருந்திருக்க வேண்டிய ஆட்சிக் காலம், எவ்வளவு இழுக்காகி விட்டது?! இதைப் பு¡ரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

அதனால், பொரியவர் சொன்ன க்ளின்டனாதித்யன் கதை மாதி¡ரி இருக்கலாம் என்றும் எண்ணிக் கொள்ளலாம்! நம் கண்ணெதிரே நடக்கும் Dr. Jekyll and Mr. Hyde கதை என்றும் வைத்துக் கொள்ளலாம்!


கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com