ஜூலை 2006: வாசகர் கடிதம்
வாசகர்களின் குறிப்புகளுக்கு தகுந்த மரியாதை கொடுத்து அவைகளை நல்ல முறையில் எடுத்து ஆவண செய்வதை பாராட்டத்தான் வேண்டும். இதுதான் ஒரு பத்திரிகை முன்னேற்றம் அடைய சிறந்த அறிகுறி. 'அழையா விருந்தாளி' ஒரு சிறந்த முன்னோடி. ஸ்ரீகேடிஸ்ரீயின் இட்லி விற்றார் என்கிற தலைப்பை கண்டு பல இளைஞர்கள் முன் வந்து, இம்மாதிரி பலவிதமாக ஈடுபட்டால் நாடு நல்ல முறையில் முன்னேறும் என்பதில் சந்தேகம் கிடையாது.

திருவாரூரில் தேரோட்டம் என்பதை ரத்தின சுருக்கமாக ஸ்ரீமதி சீதா துரைராஜ் எழுதியிருக்கிறார். ஏனெனில் இந்த நகரில் இவ்விதமான நிகழ்ச்சியை கொண்டாடுவது சாதாரண காரியமில்லை. உற்சாகமும், கடின உழைப்பும் தீவிர கடவுள் நம்பிக்கைதான் காரணம். நிலையில்லாத கண்ணாடி ஒரு சிறந்த குறிப்பு. ஸ்ரீதமிழ் தாத்தா ஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி, டாக்டர் எஸ்.ஆர், ரங்கநாதன் எல்லோரும் தஞ்சை ஜில்லாவின் மதிப்பை உயர்த்திவிட்டார்கள். ஸ்ரீ மதுரபாரதியின் 'நல்லதும் பொல்லாததும்' ஒரு சிறந்த குறிப்பாக அமைந்துள்ளது.

அட்லாண்டா ராஜன்

'தென்றல்' ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதழின் எல்லாப் பகுதிகளுமே சிறப்பாகவும், சுவையாகவும் உள்ளன. சிறந்த தரம்வாய்ந்த இலக்கிய இதழாகவும், அதே நேரத்தில் நடப்பியல் பிரச்சனைகளைப் சுட்டிக்காட்டும் சிந்தனை ஏடாகவும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பிப் படிக்கும் பத்திரிகையாகவும், நல்ல கட்டமைப்பு அழகுடன் திகழும் 'தென்றல்' அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய கருவூலமாகும்.

சாந்தா ஞானதேசிகன்
விர்ஜினியா


நீங்கள் தென்றல் பத்திரிக்கை வழியாக, சிறந்த சேவையை செய்து வருகீறீர்கள். நான் சில வருடங்களுக்கு முன் ஓரிரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். சில வருடங்களாக, கல்வி வெளியீடுகளில் எழுதி வருகிறேன். ஆனால், தாய் நாட்டுடன் தொடர்பளிப்பதில் உங்கள் பத்திரிக்கைக்கு நிகர் இங்கு வேறேதும் இல்லை. இப்பணி தொடரட்டும்.

திருநாவக்கரசு பாலன்

© TamilOnline.com