குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)
குறுக்காக
5. பேச்சாகத் தாக்கிக் காயத்தின் அடையாளம் சென்ற வழியைக் காட்டும் (6) 6. கெட்ட காலத்தைத்தர இடையில் தயாராகுவேன் (2) 7. மாட்டின் பசி போக்க காட்டில் நெருப்பு வை (4) 9. தீபாவளிக்கு வாங்குவது புடைத்து மாறுபடும் (4) 10. மாட்டிக்கொள்ளாத அழுமூஞ்சிக் காதலியிடம் மாட்டிக்கொண்டேன் (4) 12. மனதில் தோன்றுவது சாப்பாடு இல்லாதோர் இறுதியாகச் சேர்த்தது (4) 13. ஔவை இரண்டுக்கு மேல் கிடையாது என்றாள்! (2) 14. பெரிதாக்கப்பட்ட விக்கிரக வாரியம் கரம் ஒடிந்து மாற்றம் (6)
நெடுக்காக
1. துணி காய்க்கும் தாவரம்? (2) 2. இசையின் அடிப்படையோடு அமைந்த பக்திப் பாடல் (4) 3. சாப்பாட்டிற்குச் சுவை தருவது பூண்டு துளி சேர அணிவது (4) 4. தொலையாத தொல்லை தம் சுழி நீங்கிய தீர்த்தம் உயராது (6) 8. படம் போடு திரிக்கு மாற்றமாய் மிருகம் (6) 11. பழமொழி கூறும் தற்கொலைக்கான ஆயுதம் ? (4) 12. வேவு பார்ப்பவனுக்கு மன நீரெடுக்கும் பாத்திரம் (4) 15. இடையில்லாச் சோழன் பறவை (2)
வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com
குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக: 5. அடிச்சுவடு 6. ராகு 7. தீவனம் 9. புத்துடை 10. சிக்காத 12. உணர்வு 13. சாதி 14. விரிவாக்கிய
நெடுக்காக :1. கொடி 2. பாசுரம் 3. உடுப்பு 4. தீராத்துயர் 8. வரிக்குதிரை 11. தன்வினை 12. உளவாளி 15. கிளி |